179 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம்

179 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் அருங்காட்சியகம்

1 mins read
66e52383-d4e7-4ffb-bb2c-5cb3317f3868
-

179 ஆண்டுகால வரலாறு கொண்ட சென்னை காவல் ஆணையர் அலுவலகம் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, மக்கள் பார்வைக்கு கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு காவலர்கள் குதிரையில் சுற்றுக்காவல் பணியை மேற்கொண்ட படங்கள், அவர்கள் பயன்படுத்திய வாள், பீரங்கி, துப்பாக்கிகள் முதல் தற்போதைய நவீன ஆயுதங்கள் வரை இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட சீருடைகள், வாத்திய இசைக் கருவிகள், மீட்கப்பட்ட சிலைகள், கள்ள நோட்டு அச்சடிக்கும் இயந்திரம், வெடிகுண்டுகள் என பிரம்மாண்ட அருங்காட்சியகமாக இது அமைக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ