சென்னை: வெளிநாடுவாழ் தமிழர் களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் 'புலம்பெயர் தமிழர் நல வாரியம்' என்ற புதிய அமைப்பு நிறுவப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறியுள்ள முதல்வர், புலம்பெயர்ந்த 14 தமிழர்களைக் கொண்டே இந்த நலவாரியத்தை அமைப்பதற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாடுதான் அவர்களுக்குத் தாய்வீடு. அவர்களை அரவணைப்பதும் பாதுகாப்பதும் தமிழ்நாட்டின் கடமையாகும்," என குறிப்பிட்டு உள்ளார்.
"உலகின் பெரும்பாலான நாடு களில் தமிழின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பிரச்சி னைகளுக்குத் தீர்வு காண, உதவ தமிழக அரசு முன்வந்துள்ளது.
"புலம்பெயர் தமிழர் குறித்த தரவுத்தளத்தில் பதிவு செய்பவர் களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.
"குறைந்த வருவாய் பிரிவினர் வெளிநாட்டில் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
"வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆலோ சனை பெற வசதியாக, கட்டண மில்லா தொலைபேசி வசதி, 'மொபைல் ஆப்' அமைக்கப்படும். இவர்களுக்கு என தனியாக சட்ட உதவி மையமும் அமைக்கப்படும்.
"கொவிட்-19 கிருமித் தாக்கம் காரணமாக சுமார் ஏழு லட்சம் தமிழர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலர் வேலையிழந்து திரும்பியுள்ளனர். இது போல் தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்வதற்கு ஏதுவாக இரண்டரை லட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும்," என்று முதல்வர் கூறியுள்ளார்.
உலகத் தமிழர்கள் பாராட்டு
நீண்ட நாள்களாக துயரத்தில் மூழ்கிக் கிடந்த உலகத் தமிழர்கள் இப்போது நிம்மதி அடைந்து உள்ளதாக தமிழக முதல்வரையும் அவருக்கு உறுதுணையாக உள்ள அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானையும் பாராட்டி உள்ளனர்.
இதுகுறித்து துபாய் தமிழர்கள் கூறுகையில், "வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க முதல்வர் அறிவித்துள்ள திட்டங்களைக் கேட்டு ஆறுதலும் நிம்மதியும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்துள் ேளாம். இனி எங்கள் கவலைகள் தீரும், உங்களை வாழ்த்துகிறோம்," என்று கூறியுள்ளனர்.


