சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள பொது இடங்கள், நெடுஞ் சாலைகள், அரசு நிலங்கள், புறம் போக்கு நிலங்கள், பொதுச் சாலைகள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளை மூன்று மாதங்களுக்குள் அகற்ற வேண்டும் என அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலத்தில் 'தலைவர் பூங்கா' என்ற பெயரில் பூங்கா ஒன்றை உருவாக்கி அங்கு இந்தச் சிலைகள் அனைத்தையும் வைத்துப் பரா மரிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், கோனூர் கண்டிகை கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் அண்மையில் அம்பேத்கர் சிலையை பஞ்சாயத்தினர் நிறுவினர்.
இந்நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றும்படி தாசில்தார் கூறினார்.
இதை எதிர்த்து, அதே கிராமத் தைச் சேர்ந்த வீரராகவன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நெடுஞ்சாலைகளில் சிலைகளை வைக்கக்கூடாது என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற மும் உத்தரவிட்டுள்ளதால், சிலையை அகற்றியதில் தவறில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்ட விதிமுறை களையும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் பின்பற்ற வேண்டியது அவசியம் எனத் தெரிவித்த நீதிபதி, தமிழ்நாட்டில் பொது இடங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் அகற்றவேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
சிலைகள் பராமரிப்பதற்கான செலவுகளைச் சிலையை வைத்தவர் களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் சிலைகளுக்கான பராமரிப்புத் தொகையைச் செலுத்தாதவர்களிடம் இருந்து அத்தொகையை வசூலிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டு, இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக ஆறு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும் படி அரசுக்கு உத்தரவிட்டார்.
சமுதாயத்துக்காகத் தியாகம் செய்த தலைவர்களை எந்த ஒரு தருணத்திலும் மதத்தின் ரீதியாக அடையாளப்படுத்தக் கூடாது. அதை அவர்கள் கற்பிக்கவில்லை எனத் தெரிவித்து வழக்கை நீதிபதி முடித்துவைத்தார்.
தலைவர்களின் சிலைகளை வைக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், அதேசமயம் பொது இடங்களில் சிலைகளை வைக்கக்கூடாது.
உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம்

