எல். முருகன்: திரைப்படத் துறையினர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்

சென்னை: உல­கத்­த­ரம் வாய்ந்த உயி­ரோ­வியக் கல்வி நிறு­வ­னம் அமைக்­கப்­படும் என்று மத்­திய இணை அமைச்­சர் எல். முரு­கன் தெரி­வித்து உள்­ளார்.

சென்­னை­யில் நடந்த தென்­னிந்­திய திரைப்­பட வர்த்­தக சபை நிர்­வா­கி­கள் மற்­றும் தயா­ரிப்­பா­ளர்­கள் கூட்­டத்­தில் அவர் பேசி­னார்.

அவ­ரி­டம் திரைப்­பட சங்­கங்­கள் சார்­பில் கோரிக்கை மனு அளிக்கப்­ பட்­டது.

அந்த மனு­வில் கொரோனா கார­ண­மாக திரைப்­ப­டத்­து­றை­யி­னர் சந்­திக்­கும் பிரச்­சி­னை­கள், பிரா­ணி­கள் நலவாரிய சான்­றி­தழ் பெறு­தல், படப்­பி­டிப்­பு­க­ளுக்கு ஒற்றை சாளர முறை அனு­மதி, மண்­டல திரைப்­பட தணிக்கை அலு­வ­ல­கங்­களில் பிரா­ணி­கள் நல வாரிய பிரிவை ஏற்­ப­டுத்­து­தல், திரைப்­பட தணிக்கை வாரி­யத்­தில் திரைப்­ப­டத்­து­றையைச் சேர்ந்­த­வர்­களை அதி­கம் இடம்­பெ­றச் செய்தல் உள்­ளிட்ட பல கோரிக்­கை­கள் இடம்­பெற்று இருந்­தன.

இந்த நிகழ்ச்­சி­யில் பேசிய அமைச்­சர் எல்.முரு­கன், திரைப் ­ப­டத்­து­றை­யி­ன­ரின் கோரிக்­கைக்­குத் தீர்வு காண அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் மத்­திய அரசு எடுக்­கும் என்றும் உறு­தி அ­ளித் ­தார்.

"திரைப்­ப­டத்­து­றை­யில் தொழில் புரி­வதை எளி­மை­யாக்க மத்­திய அரசு உறு­தி­பூண்­டுள்­ளது.

"சினிமா படப்­பி­டிப்­பு­க­ளுக்கு பல்­வேறு துறை­க­ளி­டம் எங்கு அனு­மதி பெறு­வது போன்ற விவ­ரங்­கள் அடங்­கிய இணை­யத்­த­ளம் அமைச்­சின் சார்­பில் ஏற்­கெ­னவே தொடங்­கப்­பட்டு உள்­ளது.

"இந்­தப் புதிய இணை­யத் த­ளம் மூலம் தயா­ரிப்­பா­ளர்­கள், இந்­தி­யா­வில் எந்­தப் பகு­தி­யி­லும் படப்­பி­டிப்பு நடத்த இணை­யம் வழி­யாக அனு­மதி பெற வகை செய்­வ­தோடு தொழில் புரி­வதை எளி­மை­யாக்­கு­வதை உறுதி செய்­யும்" என்­றார்.

'அனிமேஷன்' கல்வி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயில உலகத்தரத்திலான கல்வி நிறுவனம் ஒன்றை ஏற்படுத்த மும்பை ஐ.ஐ.டி.யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!