முகாமில் இருந்த 65 இலங்கை தமிழர்களை காணவில்லை; போலிஸ் விசாரணை

1 mins read
b64fad50-447c-453d-aec2-31f15aaa7eb8
-

சென்னை: தமி­ழ­கத்­தில் உள்ள பல்­வேறு அக­தி­ முகாம்­களில் தங்­கி­யி­ருந்த 65 இலங்கை தமி­ழர்­கள் கடந்த மாதத்­தி­லி­ருந்து காண­வில்லை.

இது பற்றி கேள்­வி­யுற்ற 'கியூ' பிரிவு போலி­சார் விசா­ரணை நடத்­தி­னர். இதில் இலங்கை அக­தி­கள் 65 பேரும் கேரள மாநி­லம் கொல்­லத்­தில் இருந்து ஒரு விசைப்­ ப­டகில் ஏறி தப்­பிச்­சென்­ற­தாக தக­வல் கிடைத்­துள்­ளது.

அவர்­கள் அனை­வ­ரும் கனடா நாட்­டுக்­குச் செல்­லும் நோக்­கத்­து­டன் பட­கில் தப்­பி­ய­தா­கக் கூறப்­ ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் அமெ­ரிக்க ராணுவ கட்­டுப்­பாட்­டில் உள்ள ஒரு தீவில் அவர்கள் மாட்­டிக்­கொண்டு தவிப்­ப­தாக மற்­றொரு தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

இது பற்­றிய முழு தக­வல்­க­ளை­யும் கியூ பிரிவு போலி­சார் சேக­ரித்து வரு­கின்­ற­னர். இந்த விவ­கா­ரம் தொடர்­பில் அனைத்­து­லக போலி­சார் உத­வி­யும் நாடப்­பட்­டுள்­ளது.