ஜெயலலிதா, சசிகலா எஸ்டேட் வங்கிக் கணக்குகள் முடக்கம்

1 mins read
c9fc3f62-c030-40b8-9a81-21776059a392
-

சென்னை: முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லிதா, சசி­க­லா­வுக்­குச் சொந்­த­மான கோட­நாடு, கர்­சன் எஸ்­டேட் வங்­கிக் கணக்­கு­களை வரு­மான வரித்­து­றை­யி­னர் முடக்­கி­யுள்­ள­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு வரு­மான வரித்­துறை சோத­னைக்­குப் பிறகு சசி­கலா, முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் சொத்­து­களை முடக்க பல்­வே­று­கட்ட நட­வ­டிக்­கை­களை வரு­மான வரித்­ துறை­யி­னர் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். கடந்த செப்டம்பர் மாதத்­தில் பினாமி சட்­டத்­தின்­கீழ் சசி­க­லா­வுக்குச் சொந்­த­மான சுமார் ரூ. 100 கோடி மதிப்­புள்ள பைய­னூர் பங்­க­ளாவை வரு­மான வரித்­து­றை­யி­னர் முடக்­கம் செய்­த­னர். அது மட்­டு­மல்­லா­மல் இது­வரை சுமார் 2,000 கோடி மதிப்­புள்ள சொத்­து­களை முடக்கி வரு­மான வரித்­து­றை­யி­னர் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் தற்­போது வரி பாக்கி நிலுவை கார­ண­மாக ஜெய­ல­லிதா மற்­றும் சசி­க­லா­வுக்­குச் சொந்­த­மான கோட­நாடு, கர்­சன் எஸ்­டேட் வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ள­தாக வரு­மான வரித்­துறை துறை­யி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.