தமிழகம்: 33% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை

தமிழகம்: 33% பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை

1 mins read
1522c9d2-6a7c-45c9-ba89-bf7dc73930bb
-

சென்னை: தமிழ்­நாட்­டில் இது­வரை 33 விழுக்­காட்­டி­னர் ஒரு தடுப்­பூசி கூட போட்­டுக்­கொள்­ள­வில்லை என மருத்­து­வத்­துறை செய­லர் ராதா­கி­ருஷ்­ணன் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசிய அவர், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் நுண் செயல்திட்­டத்தை வடி­வ­மைத்து தடுப்­பூசி போடும் திட்­டத்­தைச் செயல்­படுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

டெங்கி காய்ச்­சல், கொரோனா தொற்­றாக இருந்­தா­லும் அவற்றைக் குணப்­ப­டுத்­தும் வல்­லமை தமிழக மருத்­து­வர்­க­ளி­டம் உள்­ளது என்­றும் திரு­வா­ரூர், தஞ்சை, மயி­லா­டு­துறை, நாமக்­கல் மாவட்­டங்­களில் கொரோ­னா­வைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது என்­றும் கூறி­­னார்.

தமி­ழ­கம் முழு­வ­தும் 222 இடங்­களில் உயிர்­வாயு உற்­பத்தி மையங்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,329 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை 50 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளன.