வடிவேலு பாணியில் அனைத்து சின்னங்களிலும் ஒரு குத்து

வடிவேலு பாணியில் அனைத்து சின்னங்களிலும் ஒரு குத்து

1 mins read
fcd36f33-2fce-4de3-8ceb-be38a127e334
-

விழுப்­பு­ரம்: வடி­வேலு பட நகைச்­சுவை காட்­சி­யைப் போல "தென்னை மரத்­துல ஒரு குத்து... ஏணி­யில ஒரு குத்து" என வாக்­குச்­சீட்­டில் உள்ள மாம்­ப­ழச் சின்­னத்­தைத் தவிர்த்து மற்ற அனைத்து சின்­னங்­க­ளுக்­கும் வாக்க ளித்­துள்­ளார் ஒரு­வர்.

வேட்­பா­ளர்­கள் யாரு­டைய மன­த்தை­யும் புண்­ப­டுத்­தா­மல் இருப்­ப­தற்­காக அவர் இவ்­வாறு வாக்­க­ளித்­தி­ருக்­க­லாம் என்­று அர­சி­யல் வட்­டா­ரத்­தில் முணு­மு­ணுக்­கப்­ப­டு­கிறது.

விழுப்­பு­ரம் மாவட்­டம், காணை ஊராட்­சி­யில் பதி­வான வாக்­கு­கள் எண் ­ணப்­பட்டு வரு­கின்றன. அப்­போது, மாவட்ட கவுன்­சி­லர் பத­விக்­கான வாக்­குச்சீட்­டில் இருந்த நான்கு சின்­னங்­க­ளுக்­கும் ஒருவர் வாக்­க­ளித்­துள்­ளார்.

இந்­தச் செய்தி சமூக வலைத்­த­ளங்­களில் அதி­கம் பகி­ரப்­பட்டு வரு­கிறது.