தக்காளி, ெவங்காயம் விலை உயர்வு; மக்கள் அதிர்ச்சி

தக்காளி, ெவங்காயம் விலை உயர்வு; மக்கள் அதிர்ச்சி

1 mins read
b9a838d5-db02-4e70-a019-4bddd3b29eb7
-

சென்னை: சென்னை கோயம்­பேடு சந்­தை­யில் தக்­காளி, வெங்காயத்­தின் விலை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்பு ரூ.10க்கு விற்­கப்­பட்ட தக்­கா­ளி­யின் விலை இப்ேபாது ஒரு கிலோ ரூ.60க்கு விற்­கப்படு­வ­தால் பொது­மக்­கள் அதிர்ச்சி அடைந்­துள்­ள­னர்.

தக்­கா­ளி­யின் விலையேற்­றத்­துக்கு தமி­ழ­கம், கர்­நா­ட­கம், ஆந்­தி­ரம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் பெய்­யும் மழையே கார­ணம் என்­றும் செடி­யி­லேயே தக்­கா­ளி­கள் அழு­கும் நிலை உள்­ள­தால் வரத்து குறைந்­து­விட்­ட­தாகவும் வியா­பா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

ஆயு­த­பூஜை, விஜ­ய­த­சமி பண்­டி­கை­கள் விரை­வில் கொண்­டா­டப்­பட உள்­ளன. தீபா­வளி பண்­டி­கை­யும் நெருங்கி வருவதால் தக்­காளி, வெங்­கா­யத்­தின் தேவை கணி­ச­மாக அதி­க­ரிக்­கும். அதை மன­தில் வைத்து வெங்­கா­யம், தக்காளி யைப் பதுக்கி வருவதாகவும் ஒரு கிலோ வெங்­கா­யத்­தின் விலை ரூ.47க்கு விற்­கப்­ப­டு­வ­தாகவும் 'புதிய தலைமுறை' செய்தி தெரிவித்துள்ளது.