தரையிறங்கத் தயாராகும் 'ஸ்கைடீம்' விமானம்

தரையிறங்கத் தயாராகும் 'ஸ்கைடீம்' விமானம்

1 mins read
42b743ed-5b18-4d8f-ba7a-636d60e8ad3d
-
Google News Preferred Icon

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு 48 பயணிகளுடன் புறப்பட்டுச் ெசன்ற விமானம், திருச்சியில் மோசமான பருவநிலை காரணமாக தரை இறங்க முடியாமல் வானிலேயே தொடர்ந்து வட்டமிட்டது. அதன்பிறகும் தரை இறங்குவதற்கான சூழல் அமையாததால் மீண்டும் அது சென்னைக்கே திரும்பியது.

இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம், திருச்சியில் வானிலை சீரானதும் மீண்டும் இரவு 11.40 மணிக்கு திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்றது.

இதற்கிடையே, சென்னை அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கையில் 'ஸ்கைடீம்' விமானம் தரையிறங்க தயாராகிறது. படம்: இபிஏ