மக்களோடு மக்களாக தலையில் மண்சட்டி சுமந்த அமைச்சர்

கடலூர்: டெங்­கிக் கொசு­வின் இனப்­பெ­ருக்­கத்­தைக் கட்­டுப்­படுத்த திட்­டக்­குடி பகு­தி­யில் தூய்­மைப் பணிகளை முடுக்­கி­விட்­டுள்­ள­துடன் சுத்­தப்­ப­டுத்­தும் களத்­தில் தானும் ஒரு­வ­ரா­கக் குதித்­துள்­ளார் தொழி­லா­ளர் நலன், திறன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­ச­ரான சி.வெ.கணே­சன்,

அவர், மக்­க­ளோடு மக்­க­ளாக தலை­யில் மண்சட்­டியை சுமந்­தும் மண்­வெட்­டி­யால் முட்­பு­தர்­களை வெட்டி அகற்­றி­யும் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

கட­லூர் மாவட்­டம், திட்­டக்­குடி நக­ராட்­சி­யின் தூய்­மைப் பணி­யா­ளர்­கள், நெடுஞ்­சா­லைத்­துறை பணி­யா­ளர்­கள், திமுக தொண்­டர்­க­ளைக் கொண்டு திட்­டக்­குடி பேருந்து நிலை­யத்­தில் இருந்து வட்­டாட்­சி­யர் அலு­வ­ல­கம் வரை சாலை­யில் உள்ள குப்­பை­கள், வாய்க்­கால்கள்­, கால்வாய்களில் உள்ள அடைப்­பு­களை சி.வெ.கணே­சன் அகற்­றி­னார்.

அத்­து­டன், சாலை­யோ­ர முட்­பு­தர்­க­ளை­யும் மண்­வெட்­டி­யால் வெட்டி அவர் சுத்­தம் செய்­தார்.

இந்த தூய்­மைப் பணி­கள் நேற்று பெண்­ணா­டத்­தி­லும் அதை­யடுத்து விருத்­தா­ச­லம், பண்­ருட்டி, நெல்­லிக்­குப்­பம் பகு­தி­க­ளி­லும் தொடர்ந்து செயல்­ப­டுத்­தப்­படும் என அமைச்­சர் மேலும் கூறியுள்ளார்.

தமி­ழ­கத்­தில் கொவிட்-19 கிரு­மித்தாக்­கம் படிப்­ப­டி­யாக கட்­டுக்­குள் ஒடுங்கி வரும் நிலை­யில், டெங்­கிக் காய்ச்­சல் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. கட­லூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்­டங்­களில் இப்­பா­திப்பு அதி­க­மாக உள்­ள­தாக தமி­ழக சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளதால் அனைத்து மாவட்­டங்களிலும் கொசு ஒழிப்புப் ­பணி­கள் தொடர்­கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!