மா.சுப்பிரமணியன்: நடப்பாண்டில் 3,000 பேருக்கு டெங்கி பாதிப்பு

362 பேர் சிகிச்சையில் உள்ளனர்; பல்வேறு காய்ச்சல்களால் 11,000 பேர் அவதி

சென்னை: தமி­ழ­கம் முழு­வ­தும் நடப்பு ஆண்­டில் மட்­டும் 3,090 பேருக்கு டெங்­கி காய்ச்­சல் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வம், மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற வரு­முன் காப்­போம் திட்­டத்­தின் மருத்­துவ முகாமை தொடங்கி வைத்­துப் பேசிய அவர், பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் பலர் குணம­டைந்­துள்ள­தா­கவும் தற்­போது 362 பேர் சிகிச்சை பெற்று வரு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

சில மாதங்­க­ளுக்கு முன்பு திருப்­பூர், கன்­னி­யா­கு­மரி உள்­ளிட்ட மாவட்­டங்­களில் மட்­டும் டெங்கி பாதிப்பு அதி­க­மாக இருந்த நிலை­யில், தென்­மேற்கு பருவமழை தொடங்­கிய பின்­னர் மாநி­லம் முழு­வ­தும் பாதிப்பு அதி­க­ரித்து வரு­வ­தாக சுகா­தா­ரத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே தமி­ழ­கத்­தில் டெங்கி உட்­பட பல்­வேறு காய்ச்­சல்­க­ளால் பாதிக்­கப்­பட்­டுள்ள சுமார் 11 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்­றும் கடந்த ஆண்­டை­விட இம்­முறை டெங்கி காய்ச்­சல் வேக­மா­கப் பரவி வரு­கிறது என்­றும் இந்து தமிழ் நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை இன்­னும் ஓரிரு வாரங்­களில் தொடங்க இருப்­ப­தால், டெங்கியின் பாதிப்பு மேலும் அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ள­தாக தமி­ழக அர­சின் பொது சுகா­தா­ரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்­கு­நர் க.குழந்­தை­சாமி தெரி­வித்­த­தாக அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, கொரோனா தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், மருத்­துவ களப்­ப­ணி­யா­ளர்­க­ளுக்கு ஊக்­கத்­தொகை வழங்­கும் திட்­டம் மிக விரை­வில் செயல்­ப­டுத்­தப்­படும் என்­றார்.

தமி­ழ­கத்­தில் கொரோ­னா­வால் இறந்த மருத்­து­வர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு இழப்­பீடு வழங்­கப்­படும் என்று வெறும் அறி­விப்­பு­ட­ன் நிற்­கா­மல், தற்­போது நான்கு குடும்­பங்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அமைச்­சர் மா.சுப்­பி­ர­மணி­யன், உயி­ரி­ழந்த அனைத்து மருத்­து­வர்­க­ளின் குடும்­பத்­தா­ருக்கு இழப்­பீடு கிடைப்­பது உறுதி செய்­யப்­படும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!