உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி

உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி

2 mins read
cc8d9313-6f7f-4559-9e1c-f55804065037
-

சென்னை: ஒன்­பது மாவட்ட உள்­ளாட்­சித் தேர்­த­லில் திமுக அமோக வெற்­றி­யைப் பதிவு செய்­துள்­ளது. மாவட்ட கவுன்­சி­லர், ஒன்­றிய கவுன்­சி­லர், ஊராட்சித் தலை­வர், ஊராட்சி வார்டு உறுப்­பி­னர் என நான்கு பதவி­க­ளுக்கு நடை­பெற்ற தேர்தலில் 90 விழுக்­காடு இடங்­களை திமுக கைப்­பற்­றி­யுள்­ளது.

கடந்த 6ஆம் தேதி­யும் 9ஆம் தேதி­யும் இரண்டு கட்­டங்­க­ளாக வாக்­குப்­ப­திவு நடந்­தது. நேற்று முன்­தி­னம் காலை முதல் வாக்கு எண்­ணிக்கை நடை­பெற்று வந்த நிலை­யில், நேற்று மாலை திமுகவின் பெரும் வெற்றி உறுதி செய்­யப்­பட்­டது.

விடிய விடிய நடை­பெற்ற வாக்கு எண்­ணிக்­கை­யின் தொடக்­கத்­தில் இருந்தே திமுக முன்­ன­னிலை வகித்­தது. தேர்­தல் நடந்த 140 மாவட்ட கவுன்­சி­லர் பத­வி­களில் திமுக 138 இடங்­களை கைப்­பற்­றி­யது. அதி­மு­க­வுக்கு இரண்டு இடங்­கள் மட்­டுமே மிஞ்­சின.

இதே­போல், ஒன்­றிய கவுன்­சிலர் பத­வி­க­ளுக்கு தேர்­தல் நடந்த 1,381 இடங்­களில் திமுக கூட்­டணி 1,007 இடங்­களில் வென்­றுள்­ளது. அதி­முக­வுக்கு 214 இடங்­களும் பாம­க­வுக்கு 45 இடங்­களும் கிடைத்­துள்­ளன.

அமமுக ஐந்து இடங்­களில் வென்­றுள்ள நிலை­யில் தேமு­தி­க­வுக்கு ஒரே­யோர் இடத்­தில் மட்­டுமே வெற்றி கண்­டுள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் 96 ஒன்றிய கவுன்­சி­லர் பத­வி­களை சுயேட்சை­களும் இதர கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களும் வென்­றுள்­ள­னர்.

மாவட்ட கவுன்­சி­லர், ஒன்­றிய கவுன்­சி­லர் ஆகி­ய இரு பத­வி­களை­யும் சேர்த்து 95% இடங்­கள் திமுக வச­மாகி உள்­ளது. இதனால் அக்­கட்­சித் தொண்­டர்­கள் உற்­சா­க­ம் அடைந்­துள்­ள­னர்.

பொது மக்­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டாத வகை­யில் இந்த வெற்­றி­யைக் கொண்­டா­டு­மாறு திமு­க­வி­ன­ருக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் அறி­வு­றுத்தி உள்­ளார்.

இதற்­கி­டையே, உள்­ளாட்­சித் தேர்­தல் வாக்கு எண்­ணிக்­கை­யில் விதி­மீ­றல்­கள் நடந்­துள்­ள­தாக அதிமுக புகார் எழுப்­பி­யுள்­ளது.

இது­கு­றித்து விசா­ரிக்க வலி­யு­றுத்தி அதி­முக சார்­பாக மாநில தேர்­தல் ஆணை­யத்­தில் புகார் மனு அளிக்­கப்­பட்­டுள்­ளது.

வாக்கு எண்­ணிக்கை மையங்­களில் அதிமுக முகவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­றும் பல இடங்­களில் காலை எட்டு மணிக்கு வாக்கு எண்­ணிக்கை தொடங்­கப்­ப­ட­வில்லை என்­றும் அதிமுக சாடி­யுள்­ளது.