கோவை மாவட்டம், குருடம்பாளை யம் ஊராட்சி, ஒன்பதாவது வார்டில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றார். அங்கு பதிவான 913 வாக்குகளில் திமுகவின் அருள்ராஜ் 387 வாக்குகளுடன் வெற்றிபெற்ற நிலையில், கார்த்திக் பாஜகவை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது.
பாளையங்கோட்டையில் உள்ள சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் வெற்றிபெற்றார். பெருமாத்தாள் 1,558 வாக்குகள் பெற்ற நிலையில் மற்ற வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

