விஜய் மக்கள் இயக்கம் 109 இடங்களில் வெற்றி

விஜய் மக்கள் இயக்கம் 109 இடங்களில் வெற்றி

1 mins read
0eb5bf22-58a9-4348-a62f-15deae52a714
-

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கம்' சார்பில் போட்டியிட்ட 109 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இத்தகவலை இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இம்முறை விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் 169 உள்ளாட்சிப் பதவி இடங்களுக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டனர். இவர்களில் 13 பேர் போட்டியின்றி தேர்வு பெற்றுள்ளனர்.

நீண்ட நாள்களாக அரசியல் களத்தில் உள்ள சில கட்சிகள் கூட இந்த அளவு வெற்றி பெறவில்லை.

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வெற்றி குறித்து விஜய் இதுவரை ஏதும் தெரிவிக்கவில்லை.