படுதோல்வி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி

படுதோல்வி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சி

1 mins read
89714fb8-e900-450d-bf13-072c2c5cbd90
-
Google News Preferred Icon

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி படுதோல்வி கண்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தல்களில் அக்கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.

இந்நிலையில், முதன்முறை யாக உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி களம் கண்டது. பல இடங்களில் போட்டியிட யாருமின்றி குறைவாக இடங்களுக்கே வேட்பாளர்களைக் களமிறக்கியது.

எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தோல்வி குறித்து விரைவில் ஆலோசனை நடைபெற உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.