இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்ததாக ராமதாஸ் புகார்

இலங்கை கடற்படை அத்துமீறி நுழைந்ததாக ராமதாஸ் புகார்

2 mins read
6cf735bc-03c2-4319-b08e-330648bb1bea
-

23 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்­த­தா­கக் கூறி தமி­ழக மீன­வர்­களை இலங்கை கடற்­படையினர் கைது செய்­துள்­ளனர்.

இந்­தப் பிரச்­சி­னைக்கு நிரந்­த­ர தீர்வு காணப்­பட வேண்­டும் என்று வலியுறுத்திய பாமக நிறு­வ­னர் ராம­தாஸ், இந்­திய எல்­லைக்­குள் இலங்கை கடற்­ப­டை­யி­னர் அத்­து­மீறி நுழைந்­துள்­ள­தா­க புகார் கூறி உள்ளார். நாகை மீன்­பிடி துறை­ மு­கத்­தில் இ­ருந்து 700க்கும் மேற்­பட்ட விசைப் ­ப­ட­கு­களில் மீன­வர்­கள் மீன்­பி­டிக்­கச் சென்­றுள்­ள­னர்.

அப்­போது, எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி 23 மீன­வர்­களை இலங்கை கடற்­ப­டை­யி­னர் சிறை­பி­டித்­த­னர்.

அவர்­க­ளின் மூன்று பட­கு­க­ளை­யும் பறி­மு­தல் செய்து காங்­கே­சன் துறை­மு­கத்­தில் நிறுத்தி வைத்­துள்­ள­னர் என்று தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்தது.

கைது செய்­யப்­பட்ட தமி­ழக மீன­வர்­களை இலங்­கை­யில் உள்ள காரை­ந­கர் பகு­தி­யில் தனிமைப் ­படுத்­தும் நட­வ­டிக்­கை­யில் இலங்கை கடற்­படை ஈடு­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டார்.

அதில், தமி­ழக மீன­வர்­கள் 23 பேரும் கோடி­யக்­கரை பகு­தி­யில் இந்­திய கடல் எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­யில்தான் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், இந்­திய கடல் எல்­லை­யில் அத்­து­மீறி நுழைந்த சிங்­களப் ப­டை­யி­னர், தமி­ழக மீன­வர்­களை கைது செய்து அவர்­கள் இலங்கை எல்­லை­யில் உள்ள நெடுந்­தீவு கடல் பகு­தி­யில் அத்­து­மீறி நுழைந்­த­போது கைது செய்­யப்­பட்­ட­தாக அறி­வித்­துள்­ள­னர். சிங்­க­ளக் கடற்­ப­டை­யி­ன­ரின் இத்­த­கைய அத்­து­மீ­றல்­களை இந்­தியா ஒரு­போ­தும் அனு­ம­திக்­கக் கூடாது.

நாகை மாவட்­டத்­தை­யொட்­டிய பகு­தி­யில் இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் இடை­யி­லான கடற்­ப­ரப்பே வெகு சில கிலோ மீட்­டர்­கள்தான். அனைத்துலகக் கடல் எல்­லை­யைக் கூட வரை­ய­றுக்க முடி­யாத அள­வுக்கு அப்­ப­கு­தி­யில் கடற்­ப­ரப்பு குறு­கி­ய­தாக உள்­ளது. அத­னால், இலங்கை மீன­வர்­கள் இந்­திய எல்­லைக்­குள் நுழை­வ­தும், தமி­ழக மீன­வர்­கள் இலங்கை கடல் எல்­லைக்­குள் தவறு­ த­லாக நுழை­வ­தும் இயல்­பு. அத்­த­கைய சூழல்­க­ளில் கைது இல்­லா­மல் மென்­மை­யாக கையாள வேண்­டும் என்று பன்­னாட்டு அமைப்­பு­கள் அறி­வு­றுத்தியுள்ளன. மேலும் இந்திய கடல் எல்­லைக்­குள் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்த தமி­ழக மீன­வர்­களை இலங்கை கடற்­படை கைது செய்ததை மத்­திய அரசு கண்­டிக்க வேண்­டும்.

வங்­கக்­க­ட­லில் இரு நாட்டு மீன­வர்­களும் பரஸ்­ப­ரம் எல்­லை­க­ளைக் கடந்து சென்று மீன்­பி­டிக்க அனு­ம­திப்­பது தொடர்­பான பேச்­சு­களை மீண்­டும் தொடங்க வேண்­டும். அதற்கு முன்­பாக கைது செய்­யப்­பட்ட 23 மீன­வர்­களை உட­ன­டி­யாக விடு­விடுக்க மத்­திய, மாநில அரசு­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.