வாரயிறுதியிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி

வாரயிறுதியிலும் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி

1 mins read
3522eef1-6e08-43d0-81f9-2e74d6e303d7
-

சென்னை: தமி­ழ­கத்­தில் தொற்று குறைந்து வந்த நிலை­யில் ஊர­டங்­கில் பல்­வேறு தளர்­வு­களை தமி­ழக அரசு அறி­வித்து வரு­கிறது.

ஆனால் வார இறுதி நாட்­க­ளான வெள்ளி, சனி, ஞாயிற்­றுக் கிழமைகளில் மட்டும் வழி­பாட்­டுத் தலங்­களில் பொது­மக்­கள் வழி­பட அனு­மதியில்லை. இத­னால் அனைத்து நாள்­க­ளி­லும் கோயில்­கள், பள்ளிவாசல்­கள், தேவா­ல­யங்­கள் உள்­ளிட்ட அனைத்து வழி­பாட்­டுத் தலங்­க­ளை­யும் திறக்க வலி­யு­றுத்தி, தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள புகழ்பெற்ற 12 கோயில்­கள் முன்பு பாஜகவினர் கடந்த வாரம் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­னர்.

இதற்­கி­டையே நேற்று விஜ­ய ­த­சமி நாளில் கோயில் திறக்­கப்­பட வேண்­டும் என்று கோவை பீள­மேடு பகு­தி­யைச் சேர்ந்த ஆர்.பொன்னு சாமி என்­ப­வர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனு ஒன்­றைத் தாக்­கல் செய்­தார்.

இந்த வழக்கு விசா­ர­ணை­யின் போது, முதல்­வர் ஆலோ­சனை நடத்தி முடிவு எடுப்­பார் என அரசு தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி, தலை­மைச் செயல கத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நேற்று முன்­தி­னம் ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெற்­றது. அதில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழ­மை­களில் வழி­பாட்­டுத் தலங்­க­ளைத் திறப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்­களிலும் வழி பாட்டுத் தலங்­களைத் திறக்­க­லாம் என அனு­மதி அளித்து முதல்­வர் மு.க. ஸ்டா­லின் நேற்று உத்­த­ர­விட்­டார். ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் கடற் ­க­ரைக்கு பொது­மக்­கள் செல்­ல­வும் அனு­மதி வழங்­கப்­பட்­டது.

நர்­சரி, அங்­கன்­வாடி, மழ­லை­யர் பள்­ளி­கள் முழு­மை­யாக இயங்­க­வும் தமி­ழக அரசு அனு­மதி கொடுத்­துள்­ளது.