சொத்துக் குவிப்பு வழக்கு; சசிகலா உறவினர் சுதாகரன் அக்டோபர்16ல் விடுதலையாகிறார்

சொத்துக் குவிப்பு வழக்கு; சசிகலா உறவினர் சுதாகரன் அக்டோபர்16ல் விடுதலையாகிறார்

2 mins read
c5ce8147-19bd-4365-977b-72f5d6444334
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனான சுதாகரனின் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: ஜெய­ல­லிதா மீதான சொத்­து­க்கு­விப்பு வழக்­கில் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரும் சுதா­க­ரன் நாளை சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றார்.

அந்த வழக்­கில் நான்­கா­வது குற்­ற­வா­ளி­யாக அறி­விக்­கப்­பட்டு பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹாரா சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டார்.

ஜெய­ல­லிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்­கில் சசி­கலா, இள­வ­ரசி, சுதா­க­ரன் ஆகிய மூவ­ருக்­கும் 4 ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இதில் சசி­க­லா­வும் இள­வ­ர­சி­யும் தங்­க­ளது தண்­ட­னைக் காலத்தை முழு­மை­யாக முடித்த நிலை­யில் கடந்த பிப்­ர­வரி மாதம் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளு­டன் சிறைத் தண்­டனை அனு­ப­வித்த சுதா­க­ர­னுக்கு தண்­ட­னைக் காலத்­து­டன் சேர்த்து ஏறக்­கு­றைய ரூ.10 கோடி அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இந்­தத் தொகையை சுதா­க­ர­னால் கட்ட முடி­யாத கார­ணத்­தால் கடந்த பிப்­ர­வரி மாதம் அவர் விடு­தலை செய்­யப்­ப­ட­வில்ைல.

இத­னால் நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி கூடு­த­லாக ஓராண்டு தண்­டனை அனு­ப­விக்க நேரிட்­டது.

இதற்­கி­டையே ஏற்கெ­னவே பாளை­யங்­கோட்டை சிறை­யில் தண்­டனை அனு­ப­வித்­துள்­ள­தால் அவ­ருக்குக் கூடு­த­லாக விதிக்­கப்­பட்ட தண்­ட­னையை குறைக்க வேண்­டும் என்று சுதா­க­ரன் தரப்பினர் நீதி­மன்­றத்­தில் கேட்­டுக்­கொண்­டனர்.

இதனை ஏற்­றுக்­கொண்ட நீதி­மன்­றம், சுதா­க­ரன் அனு­ப­வித்து வரும் கூடு­த­லான ஓராண்டு தண்­ட­னைக் காலத்­தில் 89 நாட்­களை குறைத்­தது. அதன்­படி அக்­டோ­பர் 16ஆம் தேதி அவர் விடு­தலை செய்­யப்­ப­ட­வுள்­ளார்.

ஜெய­ல­லி­தா­வின் வளர்ப்பு மக­னான சுதா­க­ர­னின் திரு­ம­ணம் மிக­வும் ஆடம்­ப­ர­மாக நடை­பெற்­றது. சசி­க­லா­வின் சொந்த அக்கா மகன்­தான் சுதா­க­ரன். இவர், டி.டி.வி. தின­க­ர­னுக்கு உடன் பிறந்த தம்பி.

நடி­கர் தில­கம் சிவாஜி குடும்­பத்­தில் பெண் எடுத்­துள்ள சுதா­க­ர­னுக்கு, தன் வீட்டுத் தரப்­பி­லும் சரி மாம­னார் வீட்டுத் தரப்­பி­லும் சரி யாரும் ரூ.10 கோடி அப­ரா­தம் செலுத்த முன் வர­வில்லை.

மேலும் பத்து கோடி ரூபாய் அப­ ரா­தத்­தைக் கட்­டி­யி­ருந்­தால் அந்­தப் பணம் எங்கிருந்து வந்­தது என்ற கேள்­வி­ எழும்.

இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையானதும் அரசியலிலிருந்து ஒதுங்கி ஆன்மிகப் பணியில் ஈடு படுவார் என்று அவருக்கு நெருக்க மானவர்கள் சிலர் கூறுகின்றனர்.