கோழி மசாலா சாப்பிட்ட தாயும் மகளும் அடுத்தடுத்து மரணம்; போலிஸ் விசாரணை

கோழி மசாலா சாப்பிட்ட தாயும் மகளும் அடுத்தடுத்து மரணம்; போலிஸ் விசாரணை

1 mins read
173d3207-bb80-4e1c-a47e-c4bffc8e4bf9
கற்பகவல்லி, அவரது மகள் தர்ஷினி. படங்கள்: தமிழக ஊடகம் -

கோவில்பட்டி: கோவில்பட்டியில் உள்ள ஹோட்டலில் கோழி மசாலா வாங்கிச் சாப்பிட்ட தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

தங்கப்பநகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவனின் மனைவி கற்பகவல்லி(33). இவரது மகள் ஏழு வயது தர்ஷினி.

சென்ற செவ்வாய்க்கிழமை இரவு கடலையூர் சாலையில் உள்ள ஹோட்டலுக்கு மகளுடன் சென்ற கற்பகவல்லி கோழிக் குழம்பு வாங்கி வந்து வீட்டில் தயார் செய்த உணவு டன் சேர்த்து சாப்பிட்டதாகக் கூறப் படுகிறது. அப்போது வயிறு எரிச்சல் ஏற்பட்டதால் அருகிலுள்ள கடையி லிருந்து குளிர்பானம் வாங்கி அவர்கள் குடித்துள்ளனர்.

இரு­வ­ருக்­கும் சிறிது நேரத்­தில் வாந்தி, மூச்­சுத்திண­றல் ஏற்­பட்­டது. உற­வி­னர்­கள் அவர்­களை கோவில்­பட்டி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். அங்கு முத­லு­தவி சிகிச்சை அளிக்­கப்­பட்டு மேல் சிகிச்­சைக்கு தூத்­துக்­குடி அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­னை­யில் சேர்ப்­ப­தற்­குள் அவர்கள் இறந்து­விட்­ட­னர்.

இதை­ய­றிந்து அங்கு வந்த போலிசார், இரு­வ­ரின் உடலை பிரேதப் பரி­சோ­த­னைக்கு அனுப்பி வைத்­த­னர்.

இதற்­கி­டையே மாவட்ட உணவு பாது­காப்பு அலு­வ­லர்­கள், கோழி மசாலாவை விற்ற ஹோட்­டல், குளிர்­பா­னக் கடை ஆகிய இரண்டு இடங்­க­ளி­லும் சோதனை நடத்­தி­னர்.

ஆனால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகுதான் காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிக்கன் குழம்பு சாப்பிட்டு குளிர்பானம் குடித்தால் இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.