ஆணவக் கொலையைத் தடுக்கும்படி கணவர் புகார்

ஆணவக் கொலையைத் தடுக்கும்படி கணவர் புகார்

1 mins read
5471ed63-819c-4b3f-859b-11f71be11e49
இந்தப் புகைப்படத்தை காவல் நிலையத்தில் காண்பித்து தனது மனைவியை மீட்டுத் தருமாறு புகார் கொடுத்த செல்வன். படம்: ஊடகம் -

ஈரோடு: எனது மனை­வியை அவ­ரது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஆண­வக் கொலை செய்­து­வி­ட­லாம் என்ற அச்­சம் உள்­ள­தாக ஆட­வர் ஒரு­வர் காவல் நிலை­யத்­தில் புகார் அளித்­த­தைத் தொடர்ந்து, போலி­சா­ரின் அதி­ரடி முயற்­சி­யால் பெண் மீட்­கப்­பட்டு அவ­ரது கண­வ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளார்.

ஈரோடு மாவட்­டம், சலங்­க­பா­ளை­யத்தைச் சேர்ந்த செல்­வ­னும் பவானி குருப்ப நாயக்­கன்­பா­ளை­யத்­தைச் சேர்ந்த இள­ம­தி­யும் கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பெரி­யார் படிப்­பகத்­தில் சுய­ம­ரி­யாதை திரு­ம­ணம் செய்துகொண்­ட­னர்.

இளமதியின் கணவர் தலித் இனத்­த­வர் என்­ப­தால், இந்தக் காதல் திரு­ம­ணத்­திற்கு இள­மதி­யின் உற­வி­னர்­கள் எதிர்ப்பு தெரி­வித்­த­னர்.

இரு­வ­ரை­யும் தனித்­தனி காரில் கடத்தி மிரட்­டிய அவர்­கள், இள­ம­தியை வலுக்­கட்­டா­ய­மாக அழைத்­துச்சென்­ற­னர்.

பின்­னர் கொளத்­தூர் காவல்­நிலை­யத்­தில் நடந்த விசா­ர­ணை­யில் பெண்ணை பெற்­றோ­ரு­டன் போலி­சார் அனுப்பிவைத்­த­னர்.

இந்நிலையில், ஓராண்­டா­கி­யும் மனை­வியை மீட்­க­மு­டி­யாத நிலை­யில், ஈரோடு மாவட்டக் காவல் கண்­கா­ணிப்­பா­ளரைச் சந்­தித்து செல்­வன் புகார் மனு ஒன்றை அளித்­தி­ருந்­தார். "எனது மனை­வியைக் கடந்த ஓராண்­டாக தொடர்புகொள்ள முடி­யாத நிலை­யில் இருக்­கி­றேன். எனது மனைவி இள­ம­தியை அவ­ரது உற­வி­னர்­கள் ஆண­வக்­கொலை செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்­பாக இள­மதி எனக்கு குரல் பதிவு மூலம் தக­வல் அனுப்பி உள்ளார்," என்று கூறி ஆடியோ ஆதா­ரத்­தை அளித்­தார்.

அப்பதி­வில், இள­மதி தனது உயி­ருக்கு ஆபத்து இருப்­ப­தா­க­வும் தன்னை மீட்­கு­மா­றும் அழு­து­கொண்டே பேசி­யி­ருந்­தார். இதுகுறித்து விசா­ரணை நடத்­திய போலி­சார் இள­ம­தியை அவரது பெற்றோரிடம் இருந்து மீட்டனர்.