அதிமுக தலைமையகம் 'எம்ஜிஆர் மாளிகை' ஆக மாறியது

அதிமுக தலைமையகம் 'எம்ஜிஆர் மாளிகை' ஆக மாறியது

2 mins read
66b4c411-f747-4c57-851e-d0e084336306
-

சென்னை: சென்னை ராயப் பேட்­டை­யில் உள்ள அதி­முக தலை­மை­ய­கத்­திற்கு 'எம்­ஜி­ஆர் மாளிகை' என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

மறைந்த முன்­னாள் முதல்­வர் எம்­ஜி­ஆ­ரால் உரு­வாக்­கப்­பட்ட அதி­முக, 49 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நாளை 17ஆம் தேதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று 50வது ஆண்­டில் அடி­யெ­டுத்து வைக்­கிறது.

இந்நாளை பொன்­வி­ழா­வாகக் கொண்­டா­டு­ம் வகையில் பிரம்­மாண்­ட­மான மாநாட்டை நடத்துவதற்கு அதி­முக தலைவர்­கள் முடிவு செய்துள்ளனர்.

இது­கு­றித்து, அதி­முக ஒருங் கிணைப்­பா­ளர் ஓ.பன்­னீர்­செல்­வ­மும் இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் கூட்­டாக அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­னர்.

பொன்­விழா இலச்­சினையுடன் கூடிய, தங்க முலாம்‌ பூசப்­பட்ட பதக்­கங்­கள் அதி­முக முன்­னோடி­களுக்கு அணி­விக்கப்படும்.

அதி­முக வர­லாற்­றின் முக்­கிய நிகழ்­வு­களை 'மக்­கள் தொண்­டில் மகத்­தான 50 ஆண்­டு­கள்' என்ற தலைப்­பில் குறிப்­பே­டாக அச்­ச­டித்து விநியோகிப்பதோடு, ஆங்­காங்கே விளம்­ப­ரப் பதாகைகள் வைக்கப்படும். ‌இரட்டை இலைச் சின்­னம் வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்படும். ‌

அதி­முக வளர்ச்­சிக்­கா­கத்‌ தொண்­டாற்­றும்‌ எழுத்­தா­ளர்­கள்‌, பேச்­சா­ளர்­கள்‌, கவி­ஞர்­கள்‌, கலைத்‌ துறை­யி­னர்‌ உள்­ளிட்­டோ­ருக்கு இவ்வாண்டு முதல்‌ தந்‌தை பெரி­யார்‌, பேர­றி­ஞர்‌ அண்ணா, புரட்­சித்‌ தலை­வர்‌ எம்­‌ஜி­ஆர்‌, புரட்­சித்‌ தலைவி ஜெய­ல­லிதா ஆகி­யோ­ரது பெயர்­க­ளில்‌ விரு­து­கள்‌ வழங்கி, கெள­ர­விக்­கப்­பட உள்­ளது என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.

இதற்­கிை­டயே, "தமி­ழ­கத்­தில் கடந்த சில நாட்­க­ளாக காய்­க­றி­கள், பழங்­கள், மளிகைப் பொருட்­க­ளின் விலை தாறு­மா­றாக அதி­க­ரித்து வரு­கிறது. பண்­டிகை, திரு­மண நாள்களை முன்­னிட்டு இவற்றை பதுக்கி, அதிக விலைக்கு விற்க நினைப்போரை சட்­டத்­தின் முன் நிறுத்தவேண்­டும்," என முதல்வரை ஓ.பன்­னீர்­செல்­வம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்­ளார்.