அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறப்பு; பக்தர்கள் மனநிறைவு

அனைத்து வழிபாட்டுத் தலங்கள் திறப்பு; பக்தர்கள் மனநிறைவு

2 mins read
8e5a8187-4223-4489-847b-b6f618928e66
நவராத்திரியின் முக்கிய விழாவான விஜயதசமியை முன்னிட்டு ேநற்று மாநிலம் முழுவதும் உள்ள கோவில்கள், பள்ளிகளில் 'வித்யாரம்பம்' நிகழ்வு நடைபெற்றது. நன்னிலம் வட்டம், கூத்தனூரில் அமைந்துள்ள சரஸ்வதி அம்மன் ஆலயத்துக்கு நேற்று காலை முதலே பக்தர்கள், பெற்றோர், மாணவர்கள் குவிந்தனர். தாம்பூலத்தில் நெல் அல்லது பச்சரிசியைக் கொட்டி அதில் பிள்ளைகளை தங்கள் விரலால் உயிர் எழுத்துகளை எழுதவைத்து குழந்தைகளின் கல்வியைத் தொடங்கினர். சில இடங்களில் ஆலய அர்ச்சகர்கள் மழலையின் நாக்கில் எழுதுவதையும் காணமுடிந்தது. படம்: ஊடகம் -

நாகப்­பட்­டி­ணம்: தமி­ழ­கத்­தில் பெரும் பாலான மக்­கள் எதிர்­பார்த்­தது போலவே நேற்று விஜ­ய­த­சமி திரு நாளில் கோயில்­கள் திறக்­கப்­பட்டு பக்­தர்­கள் தரி­ச­னம் செய்­த­னர்.

பல்­வேறு தரப்­பி­ன­ரும் அனைத்து நாட்­க­ளி­லும் வழி­பாட்­டுத் தலங் களைத் திறப்­ப­தற்கு அனு­மதி கோரி­யதை அடுத்து, நேற்று முதல் ஆல­யங்­க­ளைத் திறப்­ப­தற்கு தமி­ழக அரசு இசைந்­துள்­ளது.

நாகை மாவட்­டம், வேளாங் கண்ணி புனித ஆரோக்­கிய மாதா பேரா­ல­யம், நாகூர் தர்கா, எட்­டுக்­குடி முரு­கன், சிக்­கல் சிங்­கா­ர­வே­லர், நீலா­ய­தாட்சி அம்­மன் கோவில் உள்­ளிட்ட அனைத்து வழி­பாட்­டுத் தலங்­களும் திறக்­கப்­பட்டு பக்­தர்­கள் மன­நி­றை­வு­டன் வழி­பாடு நடத்­தி­னர்.

நாகூர் தர்­கா­வில் இஸ்லா மியர்­கள் மட்­டு­மின்றி அனைத்து மதத்­தி­ன­ரும் வழி­பட்­ட­னர்.

இதே­போல், வேளாங்­கண்ணி பேரா­ல­யத்­தில் பாதி­ரி­யார்­கள் மற்­றும் பக்­தர்­கள் பங்­க­ளிப்­போடு பிரார்த்­தனை செய்­யப்­பட்டு சிறப்பு திருப்­ப­லி­கள் நடை­பெற்­றன.

குறிப்­பாக, நேற்று பெற்­றோர் குழந்­தை­களை கோயில்­க­ளுக்கு அழைத்­துச் சென்று அரி­சி­யில் எழுதி அவர்­க­ளின் கல்விப் பய­ணத்தைத் தொடங்கி வைத்­த­னர். இத­னால் கோயில்­களில் பக்­தர்­கள் கூட்­டம் நிரம்பி வழிந்­தது.

தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு கட்­டுப்­பா­டு­கள் மேலும் தளர்த்­தப்­பட்­டுள்­ளதை அடுத்து, அனைத்து வகை கடை­களும் உண­வ­கங்­களும் இரவு 11 மணி வரை இயங்க வும் அனு­மதி தரப்­பட்­டுள்­ளது.

திரு­ம­ணம் சார்ந்த நிகழ்­வு­களில் 100 பேரும் இறப்பு சார்ந்த நிகழ்­வு­களில் 50 பேரும் கலந்து கொள்­ளலாம்.

திரு­வி­ழாக்­கள், அர­சி­யல் சார்ந்த நிகழ்­வு­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை தொட­ரும் எனவும் அரசு கூறி­யுள்­ளது.

இதற்­கிை­டயே, அனைத்து நாட்­க­ளி­லும் கோயில்­களில் வழி­பட அரசு அனு­ம­தித்­துள்ள முடிவை எந்த ஒரு கட்­சி­யும் தனது வெற்றி­யா­கப் பார்க்­கக்­கூ­டாது என்று இந்து சமய அற­நி­லை­யத் துறை அமைச்­சர் சேகர் பாபு கூறி­யுள்­ளார்.

"பாஜகவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து கோவில்கள் திறக்கப்படவில்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்தே கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன," என அவர் தெரிவித்துள்ளார்.