மாணவனை தாக்கிய ஆசிரியருக்கு சிறை

கடலூர்: மாண­வன் ஒரு­வனை அடித்து, உதைத்து மூர்க்கமாக தாக்கிய சுப்­பி­ர­ம­ணி­யன் என்ற ஆசி­ரி­யரை வரும் 27ஆம் தேதி வரை சிறை­யில் அடைக்க நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

போலி­சா­ரின் விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் சுப்­பி­ர­ம­ணி­யனை அரசு இடை­நீக்­கம் செய்­துள்­ளது.

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

இந்­நி­லை­யில், கடந்த 13ஆம் தேதி அன்று மதி­யம் பன்­னி­ரண்­டாம் வகுப்­பில் இயற்­பி­யல் பாடம் படிக்­கும் மாண­வர்­கள் சஞ்­சய் சுசீந்­தி­ரன், சந்­துரு சூரியா, அஜய் குமார் பாலன் உள்­ளிட்­டோரை ஆசி­ரி­யர் சுப்­பி­ர­ம­ணி­யன் ஏன் தனது வகுப்­பிற்கு வர­வில்லை என்று கேட்டு கண்­டித்­துள்­ளார்.

பின்­னர் பள்ளியில் முட்டி போட வைத்திருந்த மாண­வரின் தலை­மு­டி­யைப் பிடித்து காலால் மிதித்து கொடூ­ர­மா­கத் தாக்­கி­யுள்­ளார்.

இதைக் கண்டு பொறுமை இழந்த மாண­வர் ஒரு­வர் தனது கைபே­சி­யில் வகுப்­பில் நடந்த சம்­ப­வத்தை காெணாளி­யாக எடுத்து இணை­யத்­தில் பகிர்ந்துள்­ளார்.

இதைக் கண்ட பொது­மக்­கள் சம்­பந்­தப்­பட்ட ஆசி­ரி­யர் மீது நட­வ­டிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதன் கார­ண­மாக ஆசிரியர் மீது சிறுவர்களுக்கு எதிரான குற்றம் உள்ளிட்ட 5 பிரி­வு­களில் போலி­சார் வழக்­குப்­ப­திவு செய்து, கைது செய்­த­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!