வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை கயிறு கட்டி மீட்பு

நெல்லை: திரு­நெல்­வேலி மாவட்­டம், திருக்­கு­றுங்­கு­டி­யில் உள்ள திரு­மலை நம்­பி கோவி­லுக்­குச் சென்­றி­ருந்த பக்­தர்­கள் வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக சிக்­கிக்­கொண்ட நிலை­யில் அவர்­க­ளைத் தீய­ணைப்­புத் துறை, வனத்­துறை, காவல்­து­றை­யி­னர் கயிறு கட்டி மீட்­ட­னர்.

நெல்லை மாவட்­டத்­தில் தொடர் மழை கார­ண­மாக வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு உள்­ளது. இத­னால், நம்பி கோவில் அடி­வா­ரத்­தில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கில் அங்­குள்ள தரைப்­பா­லம் மூழ்­கி­யது.

இந்­நி­லை­யில், திருக்­கு­றுங்­குடி நம்பி கோவி­லுக்கு தரி­ச­னம் செய்ய வந்­தி­ருந்த நூற்­றுக்­கணக்­கான பக்­தர்­கள் மீண்­டும் தங்­கள் வீட்­டுக்­குத் திரும்­ப­முடி­யா­மல் தவித்­த­னர்.

இதை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வந்த தீய­ணைப்­புப் படை­யி­ன­ரும் காவல்­து­றையினரும் கயிற்­றைக் கட்டி பக்­தர்­களை பத்­தி­ர­மாக மீட்­ட­னர்.

திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் உள்ள களக்­காடு, நாங்­கு­நேரி, வள்­ளி­யூர் வட்­டா­ரங்­களில் கடந்த இரு நாட்­க­ளா­கப் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், புரட்­டாசி கடைசி சனிக்­கி­ழமை என்­ப­தால் நேற்று மலைக்­கோ­வி­லுக்­குச் சென்ற நூற்­றுக்கு மேற்­பட்­டோர் நம்­பி­யாற்­றில் திடீர் வெள்­ளப்­பெருக்கு ஏற்­பட்­ட­தால் அக்­கரை­யில் சிக்­கிக்­கொண்­ட­னர்.

இேதபோல், கோபி, செங்­கோட்­டை­யன் நக­ரில் பலத்த மழை­யால் 25 வீடு­களை மழை வெள்­ளம் சூழ்ந்­தது. 8 வீடு­க­ளுக்­குள் மழை வெள்­ளம் புகுந்­ததால் மக்­கள் வெளியே செல்ல முடி­யா­மல் அவ­திப்­பட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!