துணிப்பெட்டியில் இருந்து அழுகிய பெண் சடலம் மீட்பு

சேலம்: பெங்­க­ளூ­ரு­வைச் சேர்ந்த மாற்­றுத்­தி­ற­னா­ளிப் பெண்­ணான தேஜ்­ மண்­டல் என்­ப­வர் சேலத்­தில் அழகு நிலை­யம் நடத்தி வந்த நிலை­யில், திடீ­ரென்று இப்­போது சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்­ளார்.

ஒரு 'சூட்­கேஸ்' பெட்­டிக்­குள் திணித்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவ­ரது உடல் அழு­கிய நிலை­யில் மீட்­கப்­பட்­டது.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில், பெண்­ணின் உடலை ஐந்து நாட்­க­ளுக்கு முன் பெட்­டி­யில் மறைத்து வைத்து இருக்­க­லாம் என்­பது தெரிய வந்­துள்­ள­தா­க போலிசார் கூறி­னர்.

அத்துடன், தேஜ் மண்­டல் பல்­வேறு இடங்­களில் உடற்­பி­டிப்பு நிலை­யங்­களை நடத்தி வந்­த­துடன் சேலம் மாந­க­ரில் அழகு நிலை­யம் என்ற பெய­ரில் ஃபேர்லேண்ட்ஸ், சங்­கர்­ந­கர் உள்­ளிட்ட மூன்று இடங்­களில் அழகு நிலை­யங்களையும் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சேலம், குமா­ர­சா­மிப்­பட்­டி­யில் அதி­முக பிர­மு­கர் நடே­சன் என்­பவருக்­குச் சொந்­த­மான அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் தேஜ் மண்­டல், 27, தனது கண­வர் பிர­தாப்­பு­டன் கடந்த ஓராண்­டாக வாட­கைக்கு வசித்து வந்­துள்­ளார்.

சென்­னை­யில் உள்ள ஒரு நிதி நிறு­வ­னத்­தில் பணி­யாற்றி வரும் பிர­தாப், சேலத்தில் உள்ள வீட்­டின் உரி­மை­யா­ளர் நடேசனை கை­பே­சி­யில் அழைத்து, கடந்த சில நாட்­க­ளாக தான் சென்­னை­யில் இருப்­ப­தா­க­வும் தேஜ் மண்­டல் தொலை­பே­சியை எடுக்­க­வில்லை என்­றும் கூறி­யுள்­ளார்.

இத­னை­ய­டுத்து, நடே­சன் தேஜ் மண்­டல் வீட்­டுக்­குச் சென்று பார்த்­த­போது வீடு உள்­பக்­கம் தாளி­டப்­பட்­டி­ருந்­தது. மேலும் வீட்­டி­லி­ருந்து துர்­நாற்­றம் வீசி­யுள்­ளது.

போலி­சார் வீட்­டின் கதவை உடைத்­துப் பார்த்­த­போது பரண் மீது இருந்த ஒரு 'சூட்­கேஸ்' பெட்­டி­யில் கை, கால்­கள் கட்­டப்­பட்டு, அழு­கிய நிலை­யில் தேஜ் மண்­ட­லின் சட­லம் இருந்ததை நடே­சன் உறு­திப்­ப­டுத்­தி­னார். போலிசாரின் விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!