நள்ளிரவில் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி வாழ்த்துகளைத் தெரிவித்த நீச்சல் வீரர்கள்

நள்ளிரவில் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி வாழ்த்துகளைத் தெரிவித்த நீச்சல் வீரர்கள்

1 mins read
55d9614f-138c-4764-a8d9-3d5bb9d5231d
நள்­ளி­ர­வில் நடுக்­க­ட­லில் மின்ஒளி­யில் பாதுகாப்பு கவசங்களுடன் கிரிக்­கெட் விளை­யா­டி­ வெற்றிபெற்ற சென்னை அணிக்கு புதுமையான முறையில் வாழ்த்து தெரிவித்த நீச்சல்வீரர்கள். படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: கடந்த பிப்ரவரி மாதம் திருவண்ணாமலை-கோவைையச் சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் புதுமையான முறையில் ஆழ்கடலில் திருமணம் செய்துகொண்டனர். இதைப்போலவே இப்போது நீச்சல் குழுவினர் கிரிக்கெட் விளையாடி வாழ்த்துகள் கூறியுள்ளனர்.

சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி நான்­கா­வது முறை­யாக ஐபி­எல் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றதற்கு வாழ்த்துகளைத் தெரி­விக்­கும் விதத்தில், நள்­ளி­ரவு நேரத்தில் ஆழ்­க­டலில் கிரிக்­கெட் விளை­யாடி ரசிகர்களை வியக்க வைத்துள்ளனர் நீச்சல் வீரர்­கள்.

துபா­யில் நடை­பெற்ற ஐபி­எல் தொட­ரின் இறு­திப் போட்­டி­யில் சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி கோல்­கத்­தாவை 27 ஓட்டங்கள் வித்­தி­யா­சத்­தில் வீழ்த்தி நான்காவது முறை­யாக வெற்றியாளர் பட்­டத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், வெற்றி வாகை சூடியுள்ள அணி­யைப் பாராட்டும் வகையில், புதுச்­சே­ரி ஆழ்­க­டல் பயிற்­சி­யா­ளர் அர­விந்­தன் தலைமை யிலான நீச்சல் குழு­வி­னர் ஆழ்­க­ட­லில் கிரிக்­கெட் போட்­டியை நடத்­தி­னர்.

சென்னை நீலாங்­கரை கடற்­பகு­தி­யில் 12 அடி ஆழத்­தில் அர­விந்த்­தும் இதர நீச்­சல் வீரர்­களும் பாது­காப்புக் கவ­சங்­க­ளு­டன் பந்தடித்தல், பந்துவீச்சு, ஸ்டெம்­பிங் என அதிரடியுடன் விளை­யாடி சென்னை சூப்­பர் கிங்ஸ் அணி­யின் வெற்­றிக்கு வாழ்த்­துக­ளைத் தெரி­வித்­த­னர்.

இது­கு­றித்து முதல்வர் மு.க.ஸ்டா­லின் தனது டுவிட்டர் பதி­வில், "மீண்­டும் ஒரு­முறை சென்னை சிங்­கங்­கள் தங்க­ளது கர்­ஜ­னையை வெளிப்­ப­டுத்தி உள்­ளன," என்று தெரி­வித்­துள்­ளார்.