வெள்ளத்தில் சிக்கிய 800 பக்தர்கள் மீட்பு

வெள்ளத்தில் சிக்கிய 800 பக்தர்கள் மீட்பு

1 mins read
8a1eb608-1d3a-4517-951a-aa803607ddd7
-

நெல்லை: திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலை நம்பி கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நம்பியாறு, அப்பகுதி கால்வாய்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது.

இதனால் நம்பி கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை, காவல்துறையினர், 800க்கும் மேற்பட்ட பக்தர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

படம்: தமிழக ஊடகம்