விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 43 இடங்களில் அதிரடி சோதனை

2 mins read
0cec922f-6db1-4f27-b645-24755eda1c4b
-

புதுக்­கோட்டை: அதி­முக முன்­னாள் அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­க­ருக்­குச் சொந்­த­மாக தமி­ழ­கம் முழு­வ­தும் உள்ள 43 இடங்­களில் நேற்று காலை முதல் வரு­மான வரித்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி வரு­கின்­ற­னர்.

விரா­லி­மலை அருகே இலுப்­பூ­ரில் உள்ள விஜ­ய­பாஸ்­கர் வீட்­டில் சோதனை நடை­பெற்­றதை அடுத்து அங்கே அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் குவிந்­த­னர். இதை­ய­டுத்து, அப் பகு­தி­யில் போலிஸ் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

விஜ­ய­பாஸ்­கர் கடந்த ஐந்து ஆண்­டு­களில் தனது வரு­மா­னத் துக்­கும் அதி­க­மாக ரூ.27 கோடிக்கு சொத்­து­களை வாங்கி குவித்­துள்ள தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி சாரின் முதல் தக­வல் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

புதுக்­கோட்டை காவல்­நி­லை­யத்­தில் விஜ­ய­பாஸ்­கர் மீதும் அவ­ரது மனைவி ரம்யா மீதும் தமிழக லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் சொத்­துக் குவிப்பு வழக்­குப் பதிந்­துள்­ள­னர்.

"விஜயபாஸ்கர் அமைச்­ச­ராக இருந்தபோது, கொரோனா காலத்­துக்குத் தேவையான மருத்­துவ உப­க­ர­ணங்­கள் வாங்­கி­யதில் முறை­கேடு செய்­துள்­ளார். டிப்­பர் லாரி­கள், சிமெண்ட் கலவை இயந்­தி­ரம், 53 லட்­சத்­திற்கு பிஎம்டபிள்யூ கார், 40 லட்­சத்­திற்கு 85 சவ­ரன் தங்க நகை­களை வாங்கி உள்­ள­ார்," என புகார்கள் எழுந்­துள்­ளன.

முன்­ன­தாக அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் எம்.ஆர். விஜய பாஸ்­கர், எஸ்.பி. வேலு­மணி, கே.சி. வீர­மணி ஆகி­யோ­ருக்­குச் சொந்த மான இடங்­களில் இச்சோதனை நடந்தது குறிப்­பி­டத்­தக்­கது.

இலுப்­பூ­ரி­லுள்ள விஜ­ய­பாஸ்­க­ரின் வீடு, குடும்ப நண்­பர்­க­ளான சுப்­பையா, குபேந்­தி­ரன், பாண்­டி­யன் ஆகி­யோ­ரின் வீடு­கள், மாம­னார் வீடு, திரு­வேங்­கை­வா­ச­லில் உள்ள கல்­கு­வாரி, இலுப்­பூ­ரி­லுள்ள தங்­கும் விடுதி, கல்வி நிறு­வனங்­க­ளி­லும் இந்­தச் சோதனை நடந்தது.

இந்­நி­லை­யில், விஜ­ய­பாஸ்­க­ரின் மனைவி, மூத்த மக­ளுக்கு கிருமி பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­க் கூறப்பட்ட நிலையில், தனி­மைப்­படுத்திக்கொண்­டுள்ள விஜ­ய­பாஸ்­கர் மனை­வி­யி­டம் பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் அணிந்து லஞ்ச ஒழிப்­புத்­துறை அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.