மது, அசைவப் பிரியர்களுக்கு தடுப்பூசி முகாம்

மது, அசைவப் பிரியர்களுக்கு தடுப்பூசி முகாம்

1 mins read
fb33f901-6699-46d4-b259-c219d7acc186
-

சென்னை: ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாெபரும் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. ஆனால், இவ்வாரம் அசைவப் பிரியர்களையும் மதுப்பிரியர்களையும் ஈர்க்கும் விதமாக தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக் கிழமைக்குப் பதிலாக சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளதாக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தெரிவித்துள்ளார்.

"அசைவம் சாப்பிட்டால் தடுப்பூசி போடக்கூடாது என பொய்யான வதந்தி பரவுகிறது. இதை நம்புவது தவறு. எனினும் அவ்வாறு தடுப்பூசி போடாமல் தவிர்ப்பவர்களையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்யும் விதமாக, இவ்வாரத்தில் 50,000 தடுப்பூசி முகாம்களை சனிக்கிழமை அன்று நடத்த உள்ளோம்," என்று அவர் மேலும் கூறினார்.