'சசிகலாவுடன் பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார்'

'சசிகலாவுடன் பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார்'

1 mins read
eb7f3f0d-f33f-4140-ba3c-42ef465d949b
-
Google News Preferred Icon

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் புகழேந்தி, செய்தியாளர்களிடம் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியில் உள்ளதாகவும் நேரம் வரும்போது அவரை நீக்கிவிட்டு சசிகலாவுடன் இணைந்து பன்னீர்செல்வம் கட்சியை வழிநடத்துவார் எனவும் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

"அதிமுக கட்சி எந்த நோக் கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்ைதக் கடந்து திசைமாறி சென்றுகொண்டுள்ளது. அதிமுக கட்சி யாருடைய சொத்தும் அல்ல, இது ஏழைகளின் சொத்து. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்சியை வழிநடத்தமுடியும்," என்றார்.

அத்துடன், சசிகலாவை அனு மதிக்கமாட்டோம் என்று கூறுவதற்கு ஜெயக்குமாருக்கு என்ன உரிமை உள்ளது என்று கேள்வி எழுப்பிய புகழேந்தி, "சசிகலாவை நம்பிேனார் கைவிடப்படார்," என்றார்.