'கொரோனா மூன்றாவது அலை ஏற்பட சாத்தியமில்லை'

'கொரோனா மூன்றாவது அலை ஏற்பட சாத்தியமில்லை'

1 mins read
52de2ba7-b04a-46be-8cc5-2c2ff345b5c6
-

கொடைக்­கா­னல்: தமி­ழ­கத்­தில் கொரோனா மூன்­றாம் அலை­யால் மக்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான சாத்­தி­யம் இல்லை என்று தமி­ழக சுகா­தா­ரத்­ து­றைச் செய­லா­ளர் டாக்­டர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

திண்­டுக்­கல் மாவட்­டம், கொடைக்­கா­னல் மருத்­துவ மனை­யில் ஆய்வு செய்­த ­பின்­னர், அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தினம் மாலை வரை மொத்­தம் 5 கோடியே 32 லட்­சம் பேருக்கு தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

"ஏறக்­கு­றைய 67% மக்­கள் முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 27% மக்­கள் இரண்டாம் தவணை தடுப்­பூ­சி­யும் போட்­டுள்­ள­தால், மாநி­லத்­தில் கொரோனா மூன்றாவது அலை ஏற்­பட வாய்ப்பு இல்லை. இது­வரை ஐந்து சிறப்பு தடுப்­பூசி முகாம்­கள் மூலம் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தால் மூன்றாம் அலை பாதிப்பு தடுக்­கப்­பட்­டுள்­ளது," என்று சொன்­ன­வர், "தமி­ழ­கத்­தில் டெங்கிக் காய்ச்­ச­லின் தாக்­கமும் அதி­கம் இல்லை. தற்­போது வரை 381 பேர் சிகிச்­சை­யில் உள்­ள­னர்," என்று குறிப்பிட்டார்.