சென்னை: 'மக்களைத் தேடி மருத்துவம்', 'மக்களைத் தேடி பல் மருத்துவம்' ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, 'இல்லம் தேடி கல்வி' என்ற திட்டத்திற்கான விழிப்புணர்வு பயணத்தை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிவைத்தார்.
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கல்வி ஆற்றலை மேம் படுத்தவும் கொரோனா காலத்தில் படிக்க முடியாமல் விடுபட்டுப் போன பாடங்களை மாணவர்கள் கற்றுத் தெளியவும் வீடுகளுக்கே சென்று பாடம் போதிக்கப்பட உள்ளது.
இதற்காக நடப்பு ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 200 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், "இல்லம் தேடி கல்வி' திட்டம் முதல்கட்டமாக திருச்சி, தஞ்சை, நாகை, கடலூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, ஈரோடு போன்ற 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும்.
"இதனைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களும் இத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
"மாணவா்களின் வசிப்பிடம் அருகில் சிறிய குழுக்கள் மூலம் தன்னாா்வலா்களைக் கொண்டு மாலை 5 முதல் இரவு 7 மணி வரை வகுப்புகள் நடைபெற உள்ளன. பாடம் படித்துத் தர ஆர்வ முள்ள தன்னார்வலர்களுக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க வும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் ஒரு வாரத்தில் துவங்கி வைக்க உள்ளார்," என்று சொன்னார்.