'சசிகலா அரசியல் பேசக் கூடாது'

'சசிகலா அரசியல் பேசக் கூடாது'

1 mins read
45541ee0-1a19-4b96-98ba-d75fd19decc7
-

குடி­யாத்­தம்: சசி­கலா தனது அர­சி­யல் பேச்சை நிறுத்­தி­னாலே ஜெய­ல­லி­தா­வின் ஆன்மா சாந்தியடைந்து விடும் என்று அதி­முக துணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் கே.பி.முனி­சாமி கூறி­யுள்­ளார்.

வேலூர் மாவட்­டம், குடி­யாத்­தத் தில் நடந்த அதி­முக கூட்­டத்­தில் அவர் பேசி­ய­போது, "அதி­முகவுக்­கும் சசி­க­லா­வுக்­கும் எந்த ஒரு சம்­பந்­த­மும் இல்லை. ஜெய­ல­லிதா மீது உண்­மை­யான பற்று சசி­கலாவுக்கு இருக்குமானால், அவர் இனி அர­சி­யல் பேசக்கூடாது. அவர் கட்­சிக்கு தொண்டராக வர­வில்லை, ஜெய­ல­லி­தா­விற்கு உத­வி­யா­ள­ராக வந்­த­வர். காம­ரா­ஜர், மகாத்மா காந்தி போன்­ற­வர்­க­ளுக்­குப் பலர் உத­வி­யா­ளர்­க­ளாக இருந்­துள்­ள­னர். அவர்­கள் யாரும் இப்படி அர­சி­ய­லுக்கு வர­வில்லை.

ஜெய­ல­லி­தா­வி­டம் இருந்து பிரிந்த சசி­கலா மீண்­டும் ஜெயலலி­தாவுடன் வந்து சேர்ந்த­போது ''நானோ, எனது உற­வி­னர்­களோ அர­சி­ய­லில் ஒருநாளும் ஈடு­ப­ட­மாட்­டோம்,'' என எழு­திக் கொடுத்துவிட்­டுத் தான் மீண்­டும் ஜெய­லலிதாவு­டன் வந்து இணைந்­தார். அவர் சொன்ன வாக்கை சசி­கலா காப்பாற்ற­வேண்­டும் என்று தெரி­வித்­துள்ளார்.