'திரிஷா இல்லைன்னா திவ்யா' என வெறுப்பூட்டும் கணவர் மீது புகார்

'திரிஷா இல்லைன்னா திவ்யா' என வெறுப்பூட்டும் கணவர் மீது புகார்

1 mins read
405c8335-dc28-4ae2-99aa-57fd05c7b71c
-

பெரம்­ப­லூர்: திரைப்­ப­டங்­களில் வரும் வச­னங்­க­ளைப் போல், மற்­றொரு பெண்­ணின் புகைப்­ப­டத்தை அனுப்பி 'திரிஷா இல்­லைன்னா திவ்யா' என்று குறுஞ்­செய்தி அனுப்பி வெறுப்­பேற்றி வரும் தனது கண­வர் மீது ஆட்­சி­ய­ரி­டம் கௌசல்யா என்ற பெண் புகார் அளித்­துள்­ளார்.

பெரம்­ப­லூர் மாவட்­டம், பாபங்­கரை பகு­தி­யைச் சேர்ந்த கௌசல்யா, 20, நாமக்­கல் மாவட்­டம், தெப்­பக்­குள காடு பகு­தி­யைச் சேர்ந்த ரஞ்­சித்­கு­மார், 35, என்­ப­வ­ரைக் கடந்த ஆண்டு திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

இந்­நி­லை­யில், ரஞ்­சித்­கு­மா­ருக்கு உலி­பு­ரத்­தைச் சேர்ந்த வேறு ஒரு பெண்­ணு­டன் தொடர்பு இருப்­பது குறித்து கௌசல்­யா­வின் உற­வி­னர்­கள் ரஞ்­சித்­கு­மா­ரி­டம் கேட்­ட­போது நான் அப்­ப­டித்­தான் இருப்­பேன் என்று சொன்­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அத்­து­டன், கௌசல்­யா­வின் கைபேசி எண்­ணுக்கு திரிஷா இல்லை என்­றால் திவ்யா என்ற பாணி­யில் உலி­பு­ரம் கிரா­மத்­தைச் சேர்ந்த ஜெய­சித்ரா என்ற பெண்­ணு­டன் சேர்ந்து எடுத்­துக்­கொண்ட போட்­டோவை அனுப்பி வெறுப்­பேற்றி உள்­ளார் ரஞ்­சித்­கு­மார்.

இது­கு­றித்து பெரம்­ப­லூர் அனைத்து மக­ளிர் காவல் நிலை யம், மாவட்ட காவல் கண்­கா­ணிப்பாளர் அலு­வ­ல­கம் என புகார் கொடுப்­ப­தற்­காக அலைக்­க­ழிக்­கப்­பட்ட கௌசல்யா, இப்­போது பெரம்பலூர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கத்­திற்கு தனது ஒரு மாத கைக்குழந்­தை­யு­டன் வந்து மனு அளித்­தார். உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால் தன்னை ஏமாற்­றிய ரஞ்­சித்­கு­மார் வீட்டின் முன்பு போராட்­டத்­தில் ஈடு­ப­டுவேன் என்று கூறியுள்­ளார்.