அதிமுகவினரை அடுத்தடுத்து குறிவைத்து சோதனை; ஆளுநரைச் சந்திக்கும் பழனிசாமி 'வருமான வரி சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்'

அதிமுகவினரை அடுத்தடுத்து குறிவைத்து சோதனை; ஆளுநரைச் சந்திக்கும் பழனிசாமி 'வருமான வரி சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்'

2 mins read
c55c746b-5cdd-432e-8bcc-f182ccfca637
-

சென்னை: வரு­மான வரித் துறை யினர் எனது இல்­லத்­தில் எந்த ஆவ­ணங்­க­ளை­யும் கைப்­பற்ற வில்லை என்று அதி­மு­க­வின் முன்­னாள் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் தெரி­வித்­துள்­ளார்.

"அதி­மு­க­விற்கு சோதனை என்­பது புதி­தல்ல. இந்த வரு­மா­ன­வரி சோத­னையை நான் சட்டரீதி­யாக எதிர்­கொள்­வேன்," என்­றும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், இன்று காலை 11 மணிக்கு எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னி­சாமி, அதி­முக நிர்­வா­கி­கள் உள்­ளிட்­டோர் தமி­ழக ஆளு­நர் ஆர்.என். ரவியை சந்­தித்­துப் பேச உள்­ள­னர்.

ஆளுநரிடம் அதி­மு­க­வி­னர் மீது அடுத்­த­டுத்து எடுக்­கப்­படும் சோதனை நட­வ­டிக்­கை­கள் குறித்து பழ­னி­சாமி புகார் தெரி­விக்க உள்ள ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

விஜ­ய­பாஸ்­க­ருக்­குச் சொந்­த­மான 50 இடங்­களில் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு வரை 19 மணி நேர­மாக சோதனை நீடித்­தது.

லஞ்ச ஒழிப்­புப் போலி­சா­ரின் இந்தச் சோத­னை­யில் 4.87 கிலோ தங்­கம், ரூ.23.82 லட்­சம் ரொக்­கப் பணம், சொத்து பரி­வர்த்­தனை தொடர்­புள்ள ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­ட­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை போலி­சார் அறிக்கை வெளி­யிட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இது­தொ­டர்­பாக செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சி.விஜ­ய­பாஸ்­கர், "பொது­வாழ்க்­கை­யில் இரவு பகல் பாரா­மல் கடி­ன­மாக உழைத்து வரு­கி­றேன்.

"மக்­கள் மத்­தி­யில் அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் எனக்­குச் சொந்­த­மான இடங்­களில் வரு­மான வரிச் சோதனை நடை­பெற்­றுள்ளது. இந்த பிரச்கினையை சட்டரீதி­யாக எதிர்­கொள்­வேன்," என்று கூறி யுள்ளதாக தமிழ் இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ் தக­வல் தெரிவித்துள்ளது.

இதற்­கி­டையே, இந்த சோத­னை­ குறித்து அதி­முக இரட்டைத் தலைமை திமுக அர­சுக்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

"லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னரின் சோதனை என்ற பெய­ரில் திமுக அரசு தனது பழி­வாங்­கும் உணர்ச்­சி­களை மீண்­டும் பகி­ரங்­கப்­ப­டுத்தி இருப்­பது கண்­ட­னத்­திற்கு உரி­யது.

"திமு­க­வின் முயற்­சி­க­ளால் அதிமுக இயக்கம் முடங்கப் போவதோ, சாயப் போ­வதோ இல்லை," என குறிப்­பிட்­டுள்­ளது.

இதற்கிடையே, சோதனையில் கைப்­பற்­றப்­பட்ட பொருள்­கள் குறித்த விவ­ரங்­களை லஞ்ச ஒழிப்­புத்­ துறை வெளி­யிட்­டுள்­ள நிலையில், தனது வீட்­டில் இருந்து எது­வும் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை என்று விஜ­ய­பாஸ்­கர் மறுப்பு தெரி­வித்­துள்­ளார். இந்தத் தகவல் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

நான் சட்டத்தைப் பின்பற்றி நடக்கும் குடிமகன். என் வீட்டில் இருந்து தங்கம், பணம் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்றன. கணக்கில் வராத பணம், நகை எதுவும் என்னிடம் இல்லை. என் வீட்டிலிருந்து எதுவும் கைப்பற்றப்படவில்லை.

அதி­மு­க­வின் முன்­னாள் அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர்