சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் நான்கு புதிய நீதிபதிகள் பதவியேற்பு

1 mins read
eefcef49-0e06-457b-a83f-35bceed90175
சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று புதிய நீதிபதிகளாக பொறுப்பேற்ற (வலமிருந்து இடம்) ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷபீக் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி (வலக்கோடி) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். படங்கள்: தமிழக ஊடகம் -

சென்னை: சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் நான்கு புதிய நீதி­ப­தி­கள் பதவியேற்றுக்­கொண்­டுள்ளனர். அவர்­க­ளுக்கு தலைமை நீதி­பதி சஞ்­சீவ் பானர்ஜி பதவிப் பிர­மா­ணம் செய்துவைத்­தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடு­தல் நீதி­ப­தி­க­ளாக ஸ்ரீமதி சுந்­த­ரம், டி.பரத சக்­ர­வர்த்தி, ஆர்.விஜ­ய­கு­மார், முக­மது ஷபீக் ஆகிய நால்வரையும் நிய­மித்து கடந்த வாரம் அதிபர் ராம்­நாத் கோவிந்த் உத்­த­ரவு பிறப்­பித்து இருந்த நிலை­யில், நீதிபதிகள் நால்­வ­ரும் நேற்று முன்தினம் பதவியேற்­றுக்­கொண்­ட­னர்.

பதவியேற்ற பிறகு நன்றி தெரி­வித்து புதிய நீதி­ப­தி­கள் பேசி­னர்.

நீதி­பதி ஸ்ரீமதி சுந்­த­ரம் பேசும்­போது, "சமன்­செய்து சீர்­தூக்­குங் கோல்­போல் அமைந்­தொ­ரு­பால் கோடாமை சான்­றோர்க் கணி என்ற திருக்­கு­ற­ளின்­படி நடு­நி­லை­யோடு நீதி­ப­தி­யாகப் பணி­யாற்­று­வேன்" என்று சொன்னார்.

நீதி­பதி டி.பரத சக்­ர­வர்த்தி கூறுகையில், "28 ஆண்­டு­கள் வழக்கறிஞராகப் பணி­யாற்றி தற்­போது நீதி­ப­தி­யாக பதவி ஏற்­றுள்­ளது மகிழ்ச்சி தரு­கிறது," என்­றார்.

நீதி­பதி ஆர்.விஜ­ய­கு­மார் பேசும்­போது, "என்னை இந்தப் பத­விக்கு பரிந்­துரை செய்த உச்ச நீதிமன்ற நீதி­ப­தி­கள் சஞ்­சய் கிஷன் கவுல், வி.ராம­சுப்­பி­ர­ம­ணி­யம், எம்.எம்.சுந்­த­ரேஷ் ஆகி­யோ­ருக்கு நன்­றியைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்," என்­றார். அதே­போல, நீதி­பதி முக­மது சபிக்கும் அனை­வ­ருக்­கும் நன்றி தெரி­வித்துப் பேசி­னார்.

நாட்­டி­லேயே சென்னை நீதி­மன்றத்தில்­தான் அதிக பெண் நீதி­ப­தி­கள் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். தற்­போது, ஸ்ரீமதி சுந்­த­ரம் நீதி­பதியாகப் பதவி ஏற்­றுக்­கொண்­டதைத் தொடர்ந்து பெண் நீதி­பதி­களின் எண்­ணிக்கை 13 ஆக உயர்ந்­துள்­ளது.