ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உயிரிழந்த வழக்கு மீண்டும் விசாரணை

1 mins read
08545e27-7e81-4233-ad08-826bb01db7fd
-

சேலம்: கோட­நாடு கொலை, கொள்ளை வழக்­கின் முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­படும் கன­க­ராஜ் மர­ணம் குறித்த மேல் விசாரணையை சேலம் காவல்­துறை­யி­னர் தொடங்கி உள்­ள­னர்.

சேலம் மாவட்­டம், ஆத்­தூர் அருகே நடை­பெற்ற சாலை விபத்­தில் கனகராஜ் உயிரிழந்ததாக முன்பு நடந்த விசாரணையின்போது கூறப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் இப்போது மேல் விசாரணையை சேலம் காவல்­துறை­யி­னர் தொடங்கி உள்ளனர்.

நீல­கிரி மாவட்­டம், கோட­நாடு எஸ்­டேட்­டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்­ரல் 24ஆம் தேதி கொள்ளையடிக்கும் முயற்சி நடந்­தது. அத்­து­டன், அப்போது ஓம் பக­தூர், 50, என்ற காவலரும் கொலை செய்­யப்­பட்­டார்.

இந்த கொலை, கொள்ளைச் சம்­ப­வத்­தில் முக்­கிய குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­பட்ட முன்­னாள் முதல்­வர் மறைந்த ஜெய­ல­லி­தா­வின் ஓட்­டு­ந­ரான கன­க­ராஜ் என்­ப­வரும் சாலை விபத்­தில் உயி­ரி­ழந்­ததாகக் கூறப்பட்டது.

இது­தொ­டர்­பாக ஆத்­தூர் குற்­ற­வி­யல் நடு­வர் நீதி­மன்­றத்தில் விசா­ரணை நடை­பெற்று முடிந்­தது.

கன­க­ராஜ் சாலை விபத்­தில் உய­ரி­ழந்­த­தா­க வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலை­யில், கன­க­ரா­ஜின் அண்­ணன் தன­பால் என்­ப­வர் "கன­க­ராஜ் உயி­ரி­ழப்­பில் சந்­தே­கம் இருப்­ப­தா­கவும் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்க வாய்ப்பில்லை," என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.

இதை­ய­டுத்து, விபத்து என மூடப்­பட்ட கன­க­ராஜ் மரண வழக்கு விசாரணையை போலிசார் இப்­போது மீண்­டும் தொடங்­கி­யுள்­ள­னர்.

சேலம் நீதி­மன்­றத்­தில் அனு­மதி பெற்று விசா­ர­ணையைத் தொடங்­கி­யுள்­ள­தாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தக­வல் தெரி­வித்­துள்­ளார்.