வைகோ மகனுக்கு புது பொறுப்பு; மதிமுக பிரமுகர் பதவி விலகல்

கோவை: மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ­வின் மகன் துரை வையா­பு­ரிக்கு இக்­கட்­சி­யின் ெபரும்­பா­லான உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ர­வோடு தலை­மைக் கழ­கச் செய­லா­ளர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இந்த வாரிசு அர­சி­ய­லுக்கு எதிர்ப்பு தெரி­வித்து, அக்­கட்­சி­யில் இருந்து மாநில இளை­ஞ­ர­ணித் தலை­வர் கோவை ஈஸ்­வ­ரன் நேற்று பதவி வில­கி­னார்.

தனது வில­கல் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்­கையில், “கடந்த 28 ஆண்­டு­க­ளாக என் வாழ்க்­கையை மதி­மு­க­வுக்­காகவே அர்ப்­ப­ணித்து வாழ்ந்துவிட்டேன். கட்­சி­யில் பல­ருக்­கும் திறமை உள்­ளது. வைகோ­வின் மக­னால்­தான் கட்­சியை நடத்­த­மு­டி­யும் என்­ப­தில்லை. வைகோ யாரை­யும் கை காட்­டத் தேவை­யில்லை,” என்று ஈஸ்­வ­ரன் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சரி எனத் தோன்­று­வதை தனிஒருவராக செய்ய தனி­யாக மற்­றொரு இயக்­கத்தை தொடங்­கப்­போ­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

முன்னதாக, துரை வையா­புரிக்கு பதவி வழங்­கு­வது குறித்து நடத்­தப்­பட்ட ரக­சிய வாக்­கெ­டுப்­பில் 104 வாக்­கு­கள் துரை வையா­பு­ரிக்கு ஆத­ர­வா­க­வும் இரு வாக்­கு­கள் எதி­ரா­க­வும் பதி­வா­கின.

இதைத்ெ­தா­டர்ந்து செய்தியா ளர்­க­ளி­டம் வைகோ கூறுகையில், ‘‘துரையை அர­சி­ய­லுக்கு வரக் கூடாது என சொல்­லி­யி­ருந்­தேன். ஆனால், கடந்த இரண்டு ஆண்டு களா­கவே அவரை கட்­சி­யில் இணைந்து பணி­யாற்றும்படி மதிமுக வினர் தொடர்ந்து வலி­யு­றுத்தி வந்த­தால் என் மகன் அர­சி­ய­லுக்கு வந்­துள்­ளார். அவ­ருக்கு புதுப் பொறுப்பை வழங்க வாரிசு அர­சி­யல் கார­ணமல்ல; மாறாக தொண்­டர்­க­ளின் விருப்­பம், தகு­தி­யின் அடிப்­ப­டை­யி­ல்­தான் பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது,” என்றார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!