கைதிகள்-உறவினர்கள் சந்திப்பு; ஏழு போலிசார் இடைநீக்கம்

சேலம்: தமி­ழ­கத்தை உலுக்­கிய பொள்­ளாச்சி பாலி­யல் வழக்கில் சிக்கிய கைதி­களுக்கு அவர்களது உறவினர்களைச் சந்தித்துப் பேச விதிமுறைகளை மீறி போலிசார் சலுகை காட்டியுள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரும் சர்ச்­சையைக் கிளப்பிவிட்டுள்ள இந்தச் சம்பவத்தை அடுத்து, குற்­ற­வா­ளி­களுக்கு சலுகை காட்­டிய சேலம் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய் வாளர் உள்ளிட்ட ஏழு காவ­லர்­களைப் பணி இடைநீக்­கம் செய்து சேலம் காவல் ஆணை­யர் நஜ்­மல் ஹோடா உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இந்த ஏழு பேரிடமும் துறை ரீதியான விசா­ரணை நடத்­த­வும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி யில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காெணாளியாக எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்த புகாரை அடுத்து, ஒன்பது பேர் கும்பலை போலிசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசா ரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திரு­நா­வுக்­க­ரசு, சபரி ராஜன், மணி­வண்­ணன், வசந்த் குமார், சதீஷ், பாபு, ஹேரன் பால், அரு­ளா­னந்­தம், அருண்­கு­மார் ஆகிய ஒன்­பது பேரையும் நீதி­மன்­றத்­தில் நேற்று முன்தினம் மாலை நேரில் முன்னிலைப்படுத்தினர்.

இவ்வழக்கை விசா­ரித்த நீதி­பதி நந்­தினி தேவி, வழக்கு விசார ணையை வரும் 28ஆம் தேதிக்கு ஒத்­தி­வைத்து உத்­த­ர­விட்­டார்.

இதைத்தொடர்ந்து, கைதி­களை மீண்டும் கோவை­யில் இருந்து சேலம் மத்­திய சிறைக்குக் காவல்­துறை வாக­னத்தில் அழைத்துச் சென்று ­கொண்­டி­ருந்தபோது, கோவை விமான நிலை­யம் அருகே வாகனம் திடீ­ரென நிறுத்­தப்­பட்­டது.

அப்போது, அங்கு காத்­தி­ருந்த கைதிகளின் உற­வி­னர்­கள் அவர் களைச் சந்­தித்துப் பேசினர். அதன்­பி­றகு வாக­னம் மத்­திய சிறைக்குச் சென்­றது.

இந்­தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பர­வி­யதை அடுத்து, குற்றவாளிகளுக்குத் துணை போன ஏழு போலி­சாரையும் பணி­யிடை நீக்­கம் செய்து நஜ்­மல் ஹோடா உத்­த­ர­விட்­டுள்­ளார்.

கைதிகள் தங்­கள் உற­வி­னர்­களைச் சந்­திக்க விரும்­பி­னால், முறை­யாக நீதிமன்­றத்­தின் முன் அனு­ம­தி­யைப்­ பெறவேண்­டும். ஆனால், கொடூர பாலி­யல் குற்­ற­வா­ளி­க­ளைச் சிறைக்குச் சென்று அழைத்­து வரும் வழி­யில் உற­வி­னர்­க­ளு­டன் பேசுவதற்கு போலி­சாரே அனு­ம­தித்­துள்­ளது பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!