பேருந்துக்குள் மழை பெய்வதாக மக்கள் புகார்

பேருந்துக்குள் மழை பெய்வதாக மக்கள் புகார்

1 mins read
23efa11b-81b4-42f8-ac1b-2511ffd917fe
-
Google News Preferred Icon

வால்பாறை: அரசுப் பேருந்துக்குள் அமர்ந்திருந்தும் மழைநீர் கொட்டியதை அடுத்து குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை பகுதியில் கடந்த சில நாள்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால், பேருந்துக்குள் மழைநீர் ஒழுகுவதால் அரசுப் பேருந்தில் குடை பிடித்தபடி மக்கள் பயணம் செய்தனர்.

வால்பாறையில் இருந்து சேக்கல் முடி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரசுப் பேருந்தில் முழுவதுமாக மழை நீர் ஒழுகியது.

வால்பாறை பகுதியில் ஆண்டில் பெரும்பாலான நாள்களில் அதிக அளவில் மழை பெய்கிறது.

இந்நிலையில், பேருந்துகள் ஒழுகுவதால் மக்களால் நிம்மதியாகப் பயணம் செய்யமுடியாத சூழல் உள்ளது. இதனால், மழையில் ஒழுகும் இதுபோன்ற பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விடுவதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனார்.