6,426 கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

6,426 கிராமங்களுக்கு இணைய வசதி வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

1 mins read
ef16ad76-a781-4c0e-8dc6-beec62cd09de
-

சென்னை: தமிழ்நாடு 'கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம்' அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அலைக்கற்றையை வழங்க ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 19 மாவட்டங்களில் 6,426 கிராமப் பஞ்சாயத்துகளையும் இந்த 'கண்ணாடி இழை கம்பி வடம்' மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றையை வழங்க ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.