பர்தா அணிந்து காதலியைச் சந்திக்கச் சென்ற ஆடவர் மருத்துவமனையில்

1 mins read
c8b38b83-ad43-4b01-91ac-decf0cf4a980
ஏற்கெனவே திருமணமான இந்த ஆடவர், தனது திருமணத்தை மறைத்து ஒரு பெண்ணுடன் பழகிவரும் நிலையில், அவரைப் பார்ப்பதற்காக பெண் வேடமிட்டு வந்தார். படம்: ஊடகம் -

வேலூர்: வேலூ­ரில் தனது காத­லி­யைப் பார்ப்­ப­தற்­காக நகை­கள், கைக்­க­டி­கா­ரத்­து­டன் பெண் வேட­மிட்டு, பர்தா அணிந்தபடி இரவு நேரத்­தில் ஆடவர் ஒரு­வர் ஒய்­யா­ர­மாக நடந்து வந்­துள்­ளார்.

இந்த நடை உடை பாவனை களைக் கண்டு சந்­தே­கம் அடைந்த அவ்­வூர் மக்­கள், ஆடவர் திருடராக இருக்கலாம் என்ற சந்தேகத்துடன் அவரைப் பிடித்து விசா­ரித்­த­போது, பர்­தா­வுக்­குள் இருப்­பது ஆண் என்­ப­தைக் கண்­ட­றிந்­த­னர்.

தனது காத­லிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்­ப­தற்­காக பெண் வேட­மிட்டு வந்­த­தாக உண்­மையை ஒப்­புக்­கொண்­டார்.

இதைக்கேட்ட அப்­ப­குதி மக்­கள் ஆடவரைக் கட்டி வைத்து அடித்­துத் தாக்­கி­ய­தில் மயங்கி விழுந்­த­வர் மருத்­து­வ­மனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

இச்­சம்­ப­வம் தொடர்­பாக வேலூர் வடக்கு காவல்­து­றை­யி­னர் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

வீடு­க­ளுக்குச் சல­வைக் கல் பதிக்­கும் ஊழி­ய­ராகப் பணிபுரியும் அன்­ப­ழ­கன் வேலூர் மாநக ராட்சிக்கு உட்பட்ட ஓல்டு டவுன் பகு­தியில் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திரு­ம­ண­மா­கி­, இரு குழந்தைகள் உள்ளனர்.

அதை மறைத்து தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் 19 வயது பெண்ணைக் காத­லித்து வந்­துள்­ளார்.

பணி­யில் இருந்து வீடு திரும்­பிய அன்பழகன் தனது காத­லி­யைச் சந்­திப்­ப­தற்­காக பெண்­கள் அணி­யும் பர்­தாவை அணிந்து வந்­துள்­ளார். இரவு நேரத்­தில் வீதி­யில் நடந்து வந்த அன்­ப­ழ­க­னின் உடல்மொழி­யும் காலில் அணிந்­தி­ருந்த ஆண்­க­ளின் கால­ணி­யும் அவரைக் காட்டிக்கொடுத்து விட்டன.