‘அரசியலுக்கு வந்தது எனக்கே பிடிக்கவில்லை’

திரு­நெல்­வேலி: மதி­முக பொதுச்­செ­ய­லா­ளர் வைகோ­வின் மகன் துரை வையா­பு­ரிக்­குத் தலை­மைக் கழ­கச் செய­லா­ளர் பதவி வழங்­கப்­பட்­டுள்ள நிலை­யில், "நான் அர­சி­ய­லில் கால் பதித்­துள்­ளது எனக்கே பிடிக்­க­வில்லை," என்று கூறி­யுள்­ளார்.

"என் தாய்-தகப்­பன், மனைவி, பிள்­ளை­கள் அனை­வ­ருக்­குமே நான் அர­சி­ய­லில் ஈடு­ப­டு­வ­தில் விருப்­ப­மில்லை. தொண்­டர்­கள், நிர்­வா­கி­க­ளின் நிர்­பந்­தத்­தால்­தான் நான் அர­சி­ய­லுக்கு வந்­தி­ருக்­கி­றேன்," என்று அவர் நியூஸ் 18 தொலைக்­காட்­சிக்கு அளித்த பேட்­டி­யில் மேலும் தெரிவித்தார்.

வாரிசு அர­சி­யல் என்ற குற்­றச்­சாட்டை முழு­மை­யாக மறுப்­ப­தா­கக் கூறிய அவர், "வாரிசு அர­சி­யல் எனில் எம்­எல்ஏ தேர்­த­லி­லேயே நான் நின்­றி­ருப்­பேன். ஆனால், அப்­படி நான் நிற்­க­வில்லை. தொண்­டர்­க­ளின் விருப்­பத்­துக்கு மாறாக ஒரு­வரை வலுக்­கட்­டா­ய­மாக கட்­சிக்­குள் திணிக்க முற்­ப­டு­வ­து­தான் வாரிசு அர­சி­ய­லாக நான் கரு­து­கி­றேன்," என்­றார் அவர்.

திரு­நெல்­வேலி மாவட்­டம், சங்­க­ரன்­கோ­வி­லில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "கட்­சி­யி­ன­ரி­டம் நடத்­திய ரக­சிய வாக்­கெ­டுப்­பில் 106 பேரில் 104 பேர் நான் வர­வேண்­டும் என்­றும் இரு­வர் வேண்­டாம் என்­றும் வாக்­க­ளித்­துள்­ள­னர். எனக்கு வாக்­க­ளிக்­காத இரு­வ­ரும் 'தம்­பிக்கு வாக்­க­ளிக்­க­வில்­லையே' என்று வருத்­தப்­படும் அள­வுக்கு எனது செயல்­பா­டு­கள் இருக்­கும்.

"ஒரு மலை­யைத் தூக்­கித் தோளில் வைத்­துக்­கொண்­டது போல சுமை­யா­க­வும் சவால் நிறைந்த பய­ண­மா­க­வும் இப்­பொ­றுப்பை உணர்­கி­றேன். எனது அப்­பா­வைப் போல் எனக்கு செய­லாற்­றல், சொல்­லாற்­றல் கிடை­யாது. எனி­னும், கட்­சி­யில் உள்ள தொய்­வைச் சரி­செய்­வது தனது முதல் இலக்கு," என்று அவர் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!