பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்: மரணம் வரை சிறை

பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்: மரணம் வரை சிறை

1 mins read
7f39bc3d-28f7-4b48-b1a3-eed49f6de27a
-

கடலூர்: மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயது முதியவர் இரா.ரங்கநாதன் என்பவரை அவர் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் அைடக்கும்படி கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பால கிருஷ்ணன் நேற்று தீர்ப்பளித்தார்.

அத்துடன், ரூ.30,000 அபராத மும் விதித்து அதில் ரூ.25,000ஐ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்கும்படி உத்தரவிட்டார்.

இத்தீர்ப்பை அடுத்து, ரங்கநாதன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கந்தன்பாளை யத்தைச் சேர்ந்தவர் இரா.ரங்க நாதன். கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 47 வயது பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.