திருவண்ணாமலை: பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாகத் தருவதாக ஆரணி பிரியாணிக் கடை உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், பிரியாணி கடை உரிமையாளா் காதர் பாஷா, சமையல்காரர் முனியாண்டி ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி உத்தரவிட்டது.
கடந்த மாதம் சிறுமி உயிரிழந்த வழக்கு தொடர்பில் பிணை கோரி பிரியாணிக் கடைக்காரரும் இக்கடையின் சமையல்காரரும் தாக்கல் செய்த மனு சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில், "உணவகத்தை நாங்கள் நல்லமுறையில் தரமாகத்தான் பராமரித்து வருகிறோம். கவனக்குறைவால் இச்சம்பவம் நடைபெற்றுவிட்டது. சிறுமி உயரிழந்ததை நினைத்து மன வேதனை அடைந்துள்ேளாம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கத் தயாராக உள்ேளாம்," என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரா்கள் ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருப்பதையும் சிறுமியின் குடும்பத்திற்கு இழப் பீடு வழங்குவதையும் கருத்தில் கொண்டு இரு வாரங்கள் தினமும் காலையில் காவல்நிலையத்தில் முன்னிலையாகவேண்டும் என்ற நிபந்தனையுடன் பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 'செவன் ஸ்டார் பிரியாணி' கடை செயல்பட்டு வந்தது.
இந்தக் கடைக்கு துந்தரீகம்பேட்டையைச் சோ்ந்த ஆனந்த், தனது மனைவி, 14 வயது மகன் சரண், 10 வயது மகள் லோஷினி ஆகியோருடன் செப்டம்பா் 8ஆம் தேதி வந்து பிரியாணி, தந்தூரி சிக்கன் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
வீடு திரும்பிய அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட ஆரணி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்த சிறுமி லோஷினி உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக ஆரணி நகர காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் பிரியதா்ஷினி அளித்த புகாரை அடுத்து, பிரியாணிக் கடை உரிமையாளா் அம்ஜத் பாஷா, சமையல் மாஸ்டா் முனியாண்டி ஆகியோர் செப்டம்பா் 12ல் கைது செய்யப்பட்டனா்.

