காரைக்கால்: காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த தேவமணி, 53, என்பவர் சந்தேகப் பேர்வழிகளால் கொல்லப்பட்டார்.
திருநள்ளாறு அருகே வசித்து வந்த தேவமணி, அங்குள்ள சனி பகவான் கோவில் பக்கத்தில் இருக்கும் தனது கட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆதரவாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சிலர் அவரை கடுைமயாகத் தாக்கிய தில் உயிரிழந்தார்.
இந்நிலையில், திருநள்ளாறு பகுதியில் எந்தவொரு பதற்றமும் கலவரமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தேவமணியின் உடல் காரைக்கால் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த மருத்துவமனை இருக்கும் இடம், தேவமணி வீடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்து திருநள்ளாறு போலிசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

