சேலம்: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த கைதிகளை அவர்களது உறவினர்களுடன் பேச சலுகை காட்டிய விவ காரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு ஏழு போலிசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இறைச்சிப் பிரியாணிக்கு ஆசைப் பட்டு காவல் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச அனுமதித்தது தெரியவந்தது.
கோவை நீதிமன்றத்தில் வைத்து கைதிகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என போலிசாரிடம் உறவினர்கள் அனுமதி கேட்டுள்ளனர். "நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் வீட்டில் இருந்து இறைச்சிப் பிரியாணி சமைத்து வந்துள்ளோம்," என போலிசாரிடம் உறவினர்கள் கூறினர்.
நீதிமன்றத்தில் வைத்து எந்தஒரு பொருளும் வாங்கக்கூடாது என போலிசார் கூறினர். இதை யடுத்து, கைதிகளை கோவை நீதிமன்றத்தில் முன்னிைலப்படுத்திவிட்டு மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த உறவினர்கள் காவல் வாகனத்தை நிறுத்தி பிரியாணியைக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

