குழந்ைத முன்னிலையில் திருமணம் புரிந்த தம்பதி

விருத்­தா­ச­லம்: விருத்­தா­ச­லம் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சத்யா என்ற பெண்­ணுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்­த­போது, பிறப்­புச் சான்­றி­த­ழில் தந்­தை­யின் பெய­ரைப் பதிய தாதி­யர்­கள் விவ­ரம் கேட்­ட­னர்.

அப்­போது, கண­வர் தன்னை காத­லித்து ஏமாற்­றிய கதையை சத்யா கூறி­னார்.

கட­லூர் மாவட்­டம், விருத்­தா­ச­லம் பகுதியைச் சேர்ந்­தவர்கள்­ வேல்­முரு­கன், 36, சத்யா, 27.இவர்கள் காதலித்து வந்த நிலையில், திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தா­கக் கூறி வேல்முருகன் சத்யாவை ஏமாற்றி உள்­ளார்.

இதுகுறித்து ஊ.மங்­க­லம் போலி­சா­ருக்குத் தெரி­யப்படுத்தி யதை அடுத்து, தனது தவற்றை ஒப்­புக்­கொண்டு சத்­யாவை திரு­ம­ணம் செய்­து­கொள்­வ­தாக வேல்­மு­ரு­கன் உறு­தி­ய­ளித்­தார்.

இதையடுத்து, நேற்று முன்­தினம் இரவு 9:30 மணி­ய­ள­வில் முக்கியமானவர்கள் முன்­னி­லை­யில், விருத்­தா­ச­லம் கொளஞ்­சி­யப்­பர் கோவில் சன்­னி­தி­யில் குழந்­தை­யின் முன் தம்­ப­தி­கள் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!