சோதனையில் 2,650 சவரன் தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி, 10 கார்கள் பறிமுதல்

சோதனையில் 2,650 சவரன் தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி, 10 கார்கள் பறிமுதல்

2 mins read
b5539949-b065-49b4-a9ec-f3011840da5a
-

சேலம்: சேலம் மாவட்­டம், புத்­தி­ர­கவுண்­டம்­பா­ளை­யம் பகு­தி­யைச் சோ்ந்த ஆா்.இளங்­கோ­வ­னுக்குச் சொந்­த­மான 36 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை போலி­சார் நடத்­திய சோத­னை­யில் பல லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள தங்­கம், வெள்ளி, பணம், முக்­கிய ஆவ­ணங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ள­தாக தந்தி தொலைக்­காட்சி செய்தி தெரி­வித்­தது.

தமிழ்­நாடு கூட்­டு­றவு வங்­கித் தலை­வர் ஆர்.இளங்­கோ­வ­னின் சேலம் வீடு உள்­ளிட்ட 36 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் நடத்­திய சோத­னை­யில் இது­வரை 29 லட்­சத்து 77 ஆயி­ரம் ரூபாய் ரொக்­கம், 10 சொகுசு கார்­கள், இரண்டு வால்வோ சொகுசு பேருந்­து­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், 2,650 சவ­ரன் தங்க நகை­கள், 282 கிலோ வெள்ளிப் பொருட்­கள், ரூ.68 லட்­சம் மதிப்­புள்ள வைப்­புத்­தொகை ஆவ­ணங்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சேலம், ெசன்னை, நாமக்­கல், திருச்சி, கரூா், கோவை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் 36 இடங்­களில் இந்­தச் சோதனை நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கிறது.

தமி­ழக முன்­னாள் முதல்வா் பழ­னி­சா­மி­யின் நெருங்­கிய நண்­ப­ராக விளங்­கும் இவர், சேலம் மாவட்ட அதி­முக ஜெய­ல­லிதா பேர வைச் செய­ல­ரா­க­வும் உள்ளாா்.

வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக சொத்து குவித்­த­தாக இவர் மீதும் இவரது மகன் பிர­வீன்­குமாா் மீதும் லஞ்ச ஒழிப்­புப் போலி­சார் வழக்­குப் பதிந்து சோத­னையை நடத்­தி இந்த விவரங்களைத் தெரிவித் துள்ளனர்.

இதற்கிடையே, "லஞ்ச ஒழிப்­புத்‌ துறை சோதனை என்ற பெய­ரில்‌ அதி­முக‌வின் தொண்­டர்­க­ளைத் திமுக அரசு தொடர்ச்­சி­யாக அச்­சு­றுத்தி வருகிறது.

"தனது பழி­வாங்­கும்‌ நட­வ­டிக்­கை­களை இடைவிடாது தொடர்ந்து வரு­ம் திமுகவின் செயல் கடும்‌ கண்­ட­னத்­திற்கு உரி­யது," என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்­பாடி பழ­னி­சாமி தெரி­வித்­துள்­ளார்.